பஞ்சாப் மாநிலம் குண்டுவெடிப்பு; பாக்., பயங்கரவாதிகள் சதியா?
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் பிரார்த்தனை மண்டபம் ஒன்றில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 3 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர்!
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் பிரார்த்தனை மண்டபம் ஒன்றில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 3 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர்!
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் மாவட்டதிற்கு உட்பட்ட ராஜஸ்சான்ஸி கிராமத்தில் உள்ள நிரன்கரி பவனில் ஏற்பட்ட குண்டுவெடிப்பு விபத்தில் 3 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 10 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். நிரன்கரி பவன் என்பது அக்கிராமத்தில் உள்ள மத போதனை, பிரார்த்தனை மண்டபம் ஆகும்.
2-லிருந்து 3 மோட்டார் பைக்குகளில் வந்த மர்ம நபர்கள் குண்டெறிந்து சென்றதாகவும், முகத்தினை அவர்கள் துணியால் மறைத்திருந்ததால் அடையாளம் காண இயலவில்லை எனவும் சம்பவத்தினை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
உள்ளூர் ஊடகங்களின் தகவல்படி., இந்த தாக்குதல் குறித்து உளவுத்துறை பணியகம் முன்னதாக காவல்துறையினை எச்சரித்ததாக தெரிகிறது, எனினும் காவல்துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இச்சம்பவம் குறித்து எல்லை பாதுகாப்பு பரிவு IG சுரெய்ந்தர் படேல் தெரிவிக்கையில்... இச்சம்பவத்தின் பாக்கிஸ்தான் தீவிரவாதிகளின் பங்களிப்பு இருக்கலாம் என தெரிகிறது. இச்சம்பவத்தில் ஈடுப்பட்டவர்களை அடையாளம் காண அப்பகுதி CCTV கோமிர பதிவுகளை ஆராய்ந்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து பஞ்சாப் காங்கிரஸ் கமிட்டி தலைவர் சுனில் ஜாக்கர் தெரிவிக்கையில்... பஞ்சாபின் அமைதி நிலையினை கலைப்பதற்கான முயற்சி இது, அனைத்து பாதுகாப்பு துறையினரும் இந்த விவகாரத்தில் கவனம்கொள்ள வேண்டும். விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்து இரங்கள்களை தெரிவித்துக்கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.