சத்தீஸ்கரில் 3 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை
சத்தீஸ்கரில் நக்சலைட் தேடுதல் வேட்டையின் போது 3 நக்சலைட்டுகளை பாதுகாப்பு படையினரால் சுட்டு கொல்லப்பட்டன.
சத்தீஸ்கர் மாநிலம் கச்சேகட் வனப்பகுதியில் பாதுகாப்பு படையினர் நக்சலைட்டு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது தாண்டேவாடா பகுதியில் நக்சலைட்டுகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. பாதுகாப்பு படையினர் நக்சலைட்டுகள் பதுங்கி இருந்த இடத்திற்கு சென்றனர். அப்போது பாதுகாப்பு படையினர் மீது நக்சலைட்டுகள் திடீரென தாக்குதல் நடத்தினர். பாதுகாப்பு படையினரும் பதில் தாக்குதல் தாக்குதல் நடத்தினர் இதில் 3 பேர் கொல்லப்பட்டனர், சீருடை அணிந்து இருந்த நக்சலைட்டுகள் உடல்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. அவர்களிடம் இருந்து துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கொல்லப்பட்ட மூன்று பேர்களில் ஒருவர் பெண் நக்சலைட் என்பது குறிப்பிடத்தக்கது.