அடையாளம் தெரியாத மூன்று பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்..!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சனிக்கிழமை காலை ஜம்மு-காஷ்மீர் புல்வாமா மாவட்டத்தில் நடந்த மோதலில் அடையாளம் தெரியாத மூன்று பயங்கரவாதிகளை போலீசாரும் பாதுகாப்பு படையினரும் கொன்றனர். புல்வாமாவின் ஜாதூரா பகுதியில் சனிக்கிழமை அதிகாலை 1 மணியளவில் என்கவுன்டர் தொடங்கியது என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். தொடர்ந்து தேடல் நடவடிக்கைகள் நடந்து வருகின்றன.



ஜம்மு-காஷ்மீர் புல்வாமா மாவட்டத்தில் ஜம்மு-காஷ்மீர் காவல்துறை, இந்திய ராணுவம் மற்றும் CRPF சடூரா பகுதி ஆகியவற்றின் கூட்டு நடவடிக்கையில் சனிக்கிழமை (ஆகஸ்ட் 29) அடையாளம் தெரியாத மூன்று பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். என்கவுண்டரில் ஒரு சிப்பாயும் காயமடைந்து மருத்துவ சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


ALSO READ | உள்ளூர், சர்வதேச விமானங்களில் உணவு பரிமாறலாம்: SOP அளித்தது மத்திய அரசு!!


அப்பகுதியில் பதுங்கி இருந்த பயங்கரவாதிகளிடமிருந்து பெரிய அளவிலான ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் மீட்கப்பட்டுள்ளன. கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் அடையாளங்கள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. இந்நிலையில், ஜம்மு-காஷ்மீரில் கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் ஏழு பயங்கரவாதிகள் பாதுகாப்பு படைகளால் கொல்லபட்டுள்ளனர். இந்த ஆண்டில் இதுவரை 153 பயங்கரவாதிகள் படைகளால் கொல்லப்பட்டுள்ளனர்.


சனிக்கிழமை (ஆகஸ்ட் 29) அதிகாலை 1 மணியளவில் என்கவுன்டர் வெடித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எவ்வாறாயினும், இப்பகுதியில் எத்தனை பயங்கரவாதிகள் குவிக்கப்பட்டுள்ளனர் என்பது தெரியவில்லை. முன்னதாக வெள்ளிக்கிழமை, ஷோபியன் மாவட்டத்தின் கிலூரா பகுதியில் பாதுகாப்பு படையினருடன் ஏற்பட்ட மோதலில் நான்கு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர், ஒருவர் உயிருடன் பிடிக்கப்பட்டார்.