ப்ரீ ஸ்கூலில் படிக்கும் 3 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.....
மூன்றரை வயது சிறுமிக்கு பள்ளியில் பாலியல் தொல்லை கொடுத்த இரு பெண் உதவியாளர்கள்!!
மூன்றரை வயது சிறுமிக்கு பள்ளியில் பாலியல் தொல்லை கொடுத்த இரு பெண் உதவியாளர்கள்!!
ஐதராபாத்தில் மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்க்கும் தம்பதி, தங்களது மூன்றரை வயது பெண் குழந்தையை மாதாபூரில் உள்ள ப்ரீ ஸ்கூலில் சேர்த்துள்ளனர். கடந்த வாரம் பள்ளிக்கு சென்று வீடு திரும்பிய சிறுமி, கடும் வலியால் துடித்துள்ளாள்.
சிறுமியை மருத்துவமனை அழைத்து சென்றபோது, பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டது தெரியவந்தது. இது குறித்து விசாரித்த போது சிறுமி பள்ளியில் வேலை பார்க்கும் இரண்டு பெண் உதவியாளர்கள் அந்த சிறுமியுடன் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக மிருகத்தனத்துடன் நடந்து கொண்டது தெரியவந்தது.
அதாவது சிறுமியின் பிறப்பு உறுப்பில் கற்களை நுழைத்ததாக பெண் ஊழியர்கள் இரண்டு பேர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சிறுமியின் தாயார் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சிறுமிக்கு மருத்துவப் பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
முதற்கட்ட அறிக்கையில் சிறுமி பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதற்கான எந்த ஆதாரமும் இல்லை என போலீசார் தெரிவித்துள்ளனர். இருப்பினும் விரிவான விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்துள்ள போலீசார் அந்த இரண்டு பெண்களை தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.