மகாராஷ்டிரா பேருந்து விபத்து தளத்தில் இருந்து 30 உடல்கள் மீட்பு
மகாராஷ்டிராவின் ரெய்காட் பகுதியில், பேருந்து 500 அடி உயர பள்ளத்தாக்கில் கவிழ்ந்தத்தில் 33 பேர் பலி!
மகாராஷ்டிராவின் ரெய்காட் பகுதியில், பேருந்து 500 அடி உயர பள்ளத்தாக்கில் கவிழ்ந்தத்தில் 33 பேர் பலி!
மகாராஷ்டிராவின் ரெய்காட் மாவட்டத்தின் அம்பனெலியில் உள்ள மலைப்பாதையில், சுமார் 35 பயணிகளை கொண்ட பேருந்து 500 அடி உயர பள்ளத்தாக்கில் கவிழ்ந்துள்ளது. இதில் 33 பேர் பலியானதாகவும், ஒருவர் மீட்கப்பட்டதாகவும் மாவட்ட ஆட்சியர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
விபத்து குறித்த விசாரணையில், டபோலி வேளாண்மை பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவர்கள், மஹாபலேஸ்வருக்கு பிகினிக் சென்று கொண்டிருந்த சமயத்தில் இந்த சோக சம்பவம் நடந்துள்ளது. தொடர்ந்து சம்பவ இடத்தில் மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
காயமடைந்தவர்களை மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதித்துள்ளனர். இதுவரையில் பேருந்து விபத்து தளத்தில் இருந்து 30 உடல்கள் சடலமாக மீட்டுள்ளனர்.
இது குறித்து மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர பாட்னாவிஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், "பேருந்து விபத்து குறித்த செய்தி அறிந்ததும் மிகவும் வலி மிகுந்த வருத்தத்தை அடைந்தேன். நிர்வாகம் தேவையான உதவியை செய்து வருகின்றது. தங்களின் நேசத்திற்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்காகவும், காயம் அடைந்தவர் விரைவில் குணமடையவும் பிரார்த்திக்கிறேன்" என்று பதிவு செய்துள்ளார்.