இந்தியாவில் பயன்படுத்தப்படும் கைப்பேசிகளில் 30% ஆந்திராவில் தான் உற்பத்தியாகிறது என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அவர்கள் ஒருநாள் சுற்றுபயணமாக நேற்று திருப்பதி சென்றார். அப்போது அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்று அவர் உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் அவர் தெரிவித்ததாவது...


"மருத்துவம், கல்வி மற்றும் தகவல் தொழில்நுட்பத்தில் தலைசிறந்த நகரமாக திருப்பதி உருவாக்கப்படும். திருப்பதியை நவீன நகரமாக உருவாக்குவதற் தேவையான திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளன. அந்த வகையில், திருப்பதி நகரை இணைக்கும்படி பல தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்படவுள்ளன.


தற்போது ஆந்திர மாநிலத்தில் பல கைப்பேசி உற்பத்தி நிறுவனங்கள் நிறுவப்பட்டுள்ளன. நமது நாட்டில் பயன்படுத்தப்படும் 30% கைப்பேசிகள் ஆந்திராவில் தான் தயாரிக்கப்படுகின்றன. இது நாம் பெருமைப் படக்கூடிய விஷயமாகும்." என தெரிவித்துள்ளார்.


முன்னதாக, கபிலதீர்த்தம் அருகே ‘நகர வனம்’ எனும் திட்டத்தை மரக்கன்று நட்டு தொடங்கி வைத்தார். இத் திட்டத்தின் மூலம் திருப்பதியில் 10,000 மரக்கன்றுகள் நடப்படவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது!