கர்நாடகாவில் கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் கடன் தொல்லையால் 3,515 விவசாயிகள் தற்கொலை!!
கர்நாடகாவில் கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் கடன் தொல்லையால் 3,515 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக அம்மாநில வேளாண் துறை தெரிவித்துள்ளது.
கர்நாடகா மாநில வேளாண் துறையானது கடந்த 5 ஆண்டுகளில் கடன் தொல்லையால் தற்கொலை கொண்ட விவசாயிகள் குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.
கர்நாடகாவில் மட்டும் கடந்த 5 வருடங்களில் 3,515 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.அதில்,வறட்சி மற்றும் பயிர் மகசூல் குறைபாடு காரணமாக 2,525 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
கடந்த ஏப்ரல் 2015 முதல் ஏப்ரல் 2017 வரை இடைப்பட்ட காலத்தில் மட்டும் சுமார் 2,514 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். அதிலும், கடந்த ஏப்ரல் 2017 முதல் நவம்பர் 2017 –இன் இடைப்பட்ட காலத்தில் மட்டும் 624 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.
அதிலும்,கரும்பு விவசாயிகளே அதிகளவில் இறந்துள்ளனர். மேலும், பருத்தி மற்றும் நெல் பயிரிட்டுள்ள விவசாயிகளும் தற்கொலை செய்துள்ளனர். தற்கொலை செய்தவர்களில் 30-40% பேர் விவசாயம் செய்ய கடன் வாங்கியுள்ளனர். கடனுக்கு வட்டி கட்ட முடியாமல் தற்கொலை செய்துள்ளனர். இது தொடர்பாக 1,332 கந்து வட்டிக்காரர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 585 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக கடந்த 2015-16 ஆண்டுகளுக்கு இடையே 1,483 தற்கொலைகளும் குறைந்தபட்சமாக கடந்த 2013-2014 ஆண்டுகளுக்கு இடையே 106 தற்கொலைகளும் நிகழ்ந்துள்ளதாக வேளாண் துறை இயக்குனர் பி.வை.ஸ்ரீநிவாஸ் கூறியுள்ளார்.
தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் குடும்பங்களுக்கு அரசு சார்பில் ரூ .1 லட்சம் முதல் 5 லட்சம் வரை நஷ்ட ஈட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.