ஜெய்பூரில் 2008-ம் ஆண்டு நிகழ்ந்த குண்டுவெடிப்பு தொடர்பாக 4 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்டு 
உள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

2008 மே 13 ஜெய்பூர் குண்டு வெடிப்பு ஒன்பது தொடர் குண்டுகள் 15 நிமிட இடைவெளியில் ராஜஸ்தான் மாநிலத்தில் தலை நகரான, ஜெய்ப்பூர் நகரத்தில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவம் ஆகும். இந்த குண்டுவெடிப்பில் 72 பேர் இறந்திருக்க கூடும் என்றும் 172பேர் காயம் அடைந்திருப்பார்கள் என்றும் தெரியவந்தது. இந்த ஒன்பது குண்டுகளில் ஒன்று, ஜெய்பூரின் ஹவாமகாலில் வெடித்துள்ளது. இந்த மஹால், ஒரு முக்கிய இடமாகும்.


இந்த சம்பவத்திற்கு வங்காளதேசத்தை சேர்ந்த, ஹர்கத்-உள்-ஜிஹாத்-அல்-இஸ்லாமி என்னும் அமைப்பு தன் காரணமாக இருக்ககூடும் என்று கூறப்பட்டது. 


இந்த குண்டு வெடிப்பு தாக்குதலுக்கு ஆர்டிஎக்ஸ் பயன்படுத்தப்பட்டிருந்தது. புதிய சைக்கிளில் சக்தி வாய்ந்த ஆர்டிஎக்ஸ் வெடிமருந்து பயன்படுத்தப்பட்டது. சாந்த்போல், சங்கனேர் கேட், திரிபோலியா பஜார், ஜோகரி பஜார், மனாஸ் சவுக், பதி சவுபால், சோட்டி சவுபால், ஹனுமன் மந்திர் ஆகிய இடங்களில் குண்டு வெடித்து. ஜோகரி பஜாரில் மட்டும் 3 குண்டுவெடிப்பு தாக்குதல் நடந்தது.


இந்நிலையில் 008-ம் ஆண்டு ஜெய்பூரில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு தொடர்பாக 4 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட 5 பேரில் 4 பேர் குற்றவாளிகள் என ஜெய்பூர் சிறப்பு கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.