பீகார் சப்ராவில் தப்தி-கங்கா எக்ஸ்பிரஸ் ரயிலின் 13 பெட்டிகள் தடம்புரண்டதில் 4 பேர் காயமடைந்தனர்....


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பீகாரின் சப்ரா நகரில் இருந்து சூரத் நோக்கி செல்லும் தப்தி கங்கா எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று காலை 9.45 மணியளவில் சாப்ரா நகரின் கவுதம் ஆஸ்தான் பகுதியில் வந்தபொழுது விபத்திற்குள்ளானது.  இந்த சம்பவத்தில் ரெயிலின் 13 பெட்டிகள் கட்டுப்பாட்டை இழந்து தடம் புரண்டன.  இதில் 4 பேர் காயம் அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.



இதையடுத்து, இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்த ரெயில்வே துறை  அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.  இவர்களை தொடர்ந்து, மீட்பு குழுவினரும் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். விபத்தில் காயமடைந்தவர்களை அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதித்துள்ளனர்.


கடந்த பிப்ரவரியில் பீகாரின் சஹடாய் பஜர்க் பகுதியில் சீமாஞ்சல் எக்ஸ்பிரஸ் ரெயிலின் 9 பெட்டிகள் தடம் புரண்டு விபத்திற்குள்ளானது.  இதில் 6 பயணிகள் பலியாகினர் என ரெயில்வே நிர்வாகம் தெரிவித்தது.