புல்வாமா அருகே 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை!
ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் லஷ்கர் இ தொய்பா இயக்க தீவிரவாதிகள் 4 பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.
ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் லஷ்கர் இ தொய்பா இயக்க தீவிரவாதிகள் 4 பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.
ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள லஸ்சிப்போரா என்ற இடத்தில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையொட்டி பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு பதுங்கியிருந்த தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதற்கு பாதுகாப்பு படையினர் பதில் தாக்குதல் நடத்தினர்.
இரு தரப்புக்கும் இடையே நடைபெற்ற இந்த துப்பாக்கிச்சண்டையில், தீவிரவாதிகள் 4 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். சுட்டுக்கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் லஷ்கர் -இ -தொய்பா இயக்கத்தைச்சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.