டெல்லி: சட்டவிரோதமாக பட்டாசு விற்பனை செய்த நபர் கைது
டெல்லியில் சட்டவிரோதமாக பட்டாசுகளை விற்பனை செய்து வந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த அக்டோபர் 13-ம் தேதி அன்று டெல்லியில் தீபாவளி பண்டிகையையொட்டி அக்டோபர் 31 வரை பட்டாசுக் கடைகள் திறக்க உச்ச நீதிமன்றம் தடை விதித்தது.
தீபாவளி பண்டிகையின்போது வெடிக்கப்படும் பட்டாசுகளால் ஒளி மற்றும் காற்று மாசு ஏற்பட்டு சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாக உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு போடப்பட்டது.
இதனை விசாரித்த உச்சநீதிமன்றத்தில், டெல்லி மற்றும் அதனை சுற்றி உள்ள என்சிஆர் பகுதிகளில் அக்டோபர் 31 வரை பட்டாசு விற்பனைக்கு தடை விதித்து.
இந்நிலையில் டெல்லியில் சட்டவிரோதமாக பட்டாசுகளை விற்பனை செய்த ஒருவரை டெல்லி போலீஸார் கைது செய்தனர். மங்கோல்புரியில் மொபைல் ரீசார்ஜ் கடை நடத்தி வரும் 40 வயதுடைய நபர், சட்டவிரோதமாக பட்டாசுகளை விற்பனை செய்து வந்தார். இதனையடுத்து தகவலறிந்து வந்த போலீஸார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.