கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு முதல் முறையாக அனைத்து அணைகளும் முழு கொள்ளளவை எட்டியுள்ளன!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கர்நாடகா மாநிலம் மற்றும் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கன மழை வெளுத்து வாங்கும் நிலையில், அனைத்து அணைகளும் கிடு கிடு என்று நிரம்பி வருகிறது. வெள்ள பேருக்கு ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். 


இதையடுத்து, கர்நாடகாவில் காவிரி கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல முதலமைச்சர் குமாரசாமி எதிர்த்துள்ளார். காவிரி நீர்பிடிப்பு பகுதியில் அனைத்து அணைகளும் நிறைந்து வருவதால் தமிழக விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.   


கபினி அணையின் நீர்மட்டம் சுமார் 81.46 அடியை எட்டியுள்ளது. தற்போதைய நீர்வரத்து சுமார் 43,400 கன அடியாக உயர்ந்துள்ளது. இன்னையில் வினாடிக்கு அணையிலிருந்து 45,000 கன அடி நீர் வெளியேற்றபடுகிறது.
 
இதையடுத்து, கிருஷ்ணராஜசாகர் அணை நீர்மட்டம் தற்போது 122.70 அடியை எட்டியது. நீர்வரத்து 41,961 கன அடியாக உயர்ந்துள்ளது. அணையிலிருந்து தற்போது 3,929 கன அடி நீர் வெளியேற்றபடுகிறது!