டெல்லியில் நாம் செல்ல வேண்டிய 5 முக்கிய குருத்வாராக்கள்...
சீக்கிய மதத்தை நிறுவிய குருநானக் ஜியின் பிறந்த நாள் ஒவ்வொரு ஆண்டும் குரு நானக் ஜெயந்தி அல்லது குரு புராப் என உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த திருவிழா சீக்கிய சமூகத்திற்கு அதிக முக்கியத்துவம் வாய்ந்தது மற்றும் மிகுந்த ஆர்வத்துடனும் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் இந்த ஆண்டு குறித்த இந்த விழாவிற்கு கூடுதல் சிறப்பு அளிக்கப்படுகிறது. ஏனெனில் இது குருநானக்கின் 550-வது பிறந்த நாளைக் குறிக்கிறது.
சீக்கிய மதத்தை நிறுவிய குருநானக் ஜியின் பிறந்த நாள் ஒவ்வொரு ஆண்டும் குரு நானக் ஜெயந்தி அல்லது குரு புராப் என உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த திருவிழா சீக்கிய சமூகத்திற்கு அதிக முக்கியத்துவம் வாய்ந்தது மற்றும் மிகுந்த ஆர்வத்துடனும் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் இந்த ஆண்டு குறித்த இந்த விழாவிற்கு கூடுதல் சிறப்பு அளிக்கப்படுகிறது. ஏனெனில் இது குருநானக்கின் 550-வது பிறந்த நாளைக் குறிக்கிறது.
குரு நானக் ஜெயந்தி இந்து சந்திர நாட்காட்டியின்படி கார்த்திக் (மாதம்) பூர்ணிமாவின் (பௌர்ணமி நாள்) முதல் நாளில் கொண்டாடப்படுகிறது. அந்தவகையில் இந்த ஆண்டு, குருவின் புனித பிறந்த நாள் நவம்பர் 12-ஆம் தேதி கிரிகோரியன் நாட்காட்டியின் படி கொண்டாடப்படுகிறது.
சிறந்த சீர்திருத்த துறவியான குரநானக் 1469 A.D.-ல் லாகூருக்கு அருகிலுள்ள தல்வாண்டி என்ற கிராமத்தில் பிறந்தார் (இப்போது பாகிஸ்தானில் உள்ளது). இவரது பிறந்த தினம் அன்று சீக்கியர்கள் குருத்வாரா செல்வது வழக்கம்,. அந்த வகையில் டெல்லியில் உள்ள குருத்வாராக்களில் கட்டாயம் செல்ல வேண்டிய குருத்வாராங்களின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
1) பங்களா சாஹிப் குருத்வாரா, கொனாட் பிளேஸ்
டெல்லியின் மையத்தில் அமைந்துள்ள பங்களா சாஹிப் குருத்வாரா, டெல்லியின் மிகப்பெரிய குருத்வாராக்களில் ஒன்றாகும். அமிர்தசரஸில் உள்ள பொற்கோயிலின் பிரதி என்று கூறப்படும் குருத்வாரா, உங்கள் எல்லா கவலைகளையும் விரட்டியடித்து ஆன்மீக சூழ்நிலையில் உங்களை சிக்க வைக்கும் சரியான இடம். இந்த வளாகத்தில் ஒரு சரோவர் உள்ளது, அங்கு நீங்கள் புனித நீராடலாம்.
2) சிஸ்கஞ்ச் குருத்வாரா, சாந்தினி சௌக்
சாந்தினி சௌக்கின் நெரிசலான பாதைகளில் அமைந்துள்ளது, ஒன்பதாவது சீக்கிய குருவான குரு தேக் பகதூருக்கான சிஸ்கஞ்ச் குருத்வாரா தியாகத் தளம் இடம்பெற்ற இடம். மெட்ரோ மூலம் இதை எளிதாக அணுக முடியும், ஒவ்வொரு முறையும் நீங்கள் பழைய டெல்லியின் பிரபலமான சந்தை பார்வையிடத் திட்டமிடுகிறீர்கள் என்றால், அதே நேரத்தில் சிஸ்கஞ்ச் குருத்வாராவை சென்று காண தவறாதீர்கள்.
3) ரகாப் கஞ்ச் சாஹிப் குருத்வாரா
பாராளுமன்ற இல்லத்திற்கு அருகில் ரகாப் கஞ்ச் சாஹிப் அமைந்துள்ளது. பழங்கால தோற்றமுடைய குருத்வாரா 1973-ல் கட்டப்பட்டது. தலையற்ற உடல் தகனம் செய்யப்பட்டது இங்குதான்.
4) மோதி பாக் சாஹிப் குருத்வாரா
தென் டெல்லியின் மோதி பாக் நகரில் அமைந்துள்ள குருத்வாராவிற்கு பஸ் மற்றும் மெட்ரோ வழியாக எளிதில் செல்ல முடியும். புராணங்களின் படி, குரு கோபிந்த் ஜி 1707-ல் இந்த இடத்திற்கு விஜயம் செய்தார்
5) தம்தாமா சாஹிப் குருத்வாரா
தென் டெல்லியில் உள்ள மற்றொரு ரத்தினமான தம்தாமா சாஹிப் குருத்வாரா நிஜாமுதீன் கிழக்கில் அமைந்துள்ளது. குரு கோபிந்த் சிங் ஜி மற்றும் பகதூர் ஷா ஜாபர் ஆகியோர் 1700-களில் இந்த இடத்தில் முதன்முதலில் சந்தித்ததாக நம்பப்படுகிறது