இந்திய ராணுவம் கொடுத்த பதிலடியில் 5 பாக்., வீரர்கள் பலி
பிம்பெர் மற்றும் பட்டால் செக்டாரி அத்து மீறிய பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவம் கொடுத்த பதிலடியில் 5 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.
ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மற்றும் நவ்சேரா பகுதியில் இன்று காலை பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், பிம்பர் மற்றும் பட்டால் பகுதியில் இந்திய ராணுவம் அதிரடி தாக்குதல் நடத்தியது.
இதில், பாகிஸ்தான் வீரர்கள் 5 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 6 வீரர்கள் காயமடைந்துள்ளனர். பாகிஸ்தான் முகாம்களும் சேதமடைந்துள்ளன.
இந்நிலையில், எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் அத்துமீறுவதாக கூறி, இந்திய துணை தூதருக்கு பாகிஸ்தான் அரசு சம்மன் அனுப்பியுள்ளது.
ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் எல்லையில் அவ்வபோது இந்திய நிலைகளை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது.