ஜம்முவில் 5 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை
ஜம்மு-காஷ்மீரில் இன்று 5 தீவிரவாதிகள் ராணுவ வீரர்களால் சுட்டுக்கொல்ல பட்டனர்.
ஜம்மு-காஷ்மீர் பன்டிப்போரா சன்டர்கீர் கிராமத்தில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதைத் தொடர்ந்து இன்று காலை பகுதிக்கு விரைந்து சென்ற இராணுவ வீரர்கள் அப்பகுதியை சுற்றி வளைத்தனர்.
தீவிரவாதிகள் வீரர்களின் மீது துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தினர். இருதரபினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 5 தீவிரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர்.
அப்பகுதியில் மேலும் தேடுதல் வேட்டை நடைபெற்று வருவதாகவும் ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.