மஹாராஷ்டிராவின் வார்தாவில் உள்ள புல்கான் இராணுவத் துறையில் ஏற்பட்ட வெடிகுண்டு விபத்தில் 6 பலி; 10 பேர் படுகாயமடைந்துள்ளனர்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மஹாராஷ்டிரா மாநிலம் வார்தாவில் மாவட்டத்தின் புல்கான் பகுதியில் இராணுவத் தளத்திற்கு அருகே ஏற்பட்ட குண்டு வெடிப்பில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 10-க்கு மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். புல்கான் பகுதியில் இயங்கிவரும்  ராணுவ குடோனில் வைத்திருந்த பழைய வெடிமருந்தை மண்ணில் புதைக்கும் பணி நடைபெற்றுள்ளது. 


அப்போது, எதிபாராவிதமாக பழைய வெடிமருந்து பொருள் வெடித்துள்ளது. இந்த விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும், பத்துக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களை சிகிச்சைகாக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். 


இந்த சம்பவம் குறித்து, பாதுகாப்புப் பிரிவு அதிகாரி பி.பி. பாண்டே தெரிவிக்கையில், வெடிமருந்துகள் தொழிற்சாலை கமாரியா ஊழியர்களால் பழைய வெடிபொருட்களை இடித்துத் தகர்த்த போது, புல்கோனில் இடிக்கப்பட்ட நிலத்தில் விபத்து ஏற்பட்டது" என்று தெரிவித்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் வசிக்கும் மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.    



இதற்க்கு முன்னர் 2016 ஆம் ஆண்டில், புல்கானில் வெடிமருந்துப் பெட்டியில் ஒரு குண்டு வெடிப்பில் 16 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.