கர்நாடகா மாநிலம் பகல்கோட் மாவட்டம் முதோல் என்ற இடத்தில் சர்க்கரை ஆலை ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் 6 பேர் பலியாகியுள்ளனர்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கர்நாடகாவின் பகல்கோட் பகுதியில் சர்கரை ஆலை ஒன்று இயங்கி வருகிறது. இந்த சர்கரை ஆலையில் இன்று பாய்லர் ஒன்று திடீரென வெடித்து விபத்திற்குள்ளானது. 


இந்த கோர சம்பவத்தில் 6 பேர் சம்பவயிடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 5 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட நபர்கள்  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 



இந்த சர்கரை ஆலையானது முன்னாள் அமைச்சர் முருகேஷ் நிரானி மற்றும் அவரது சகோதரர்கள் சங்கமேஷ் மற்றும் ஹனுமந்தா ஆகியோரின் நிராணி குழுமத்திற்கு சொந்தமானது என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


முன்னதாக கடந்த செப்டம்பர் மாதம் மத்திய பிரதேச மாநிலம் பிஜனோரில் ஆலை ஒன்றில் இதபோன்று வெடிவிபத்து நிகழ்ந்தது. இந்த வெடி விபத்தில் 6 தொழிலாளர்கள் பலியாகினர். விபத்திற்குள்ளான தொழிற்சாலையின் உரிமையாளர் குல்தீப் சிங், பலியானவர்கள் குடும்பத்திற்கு தலா 12 லட்சம் ரூபாய் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.