காஷ்மீரில் லஷ்கர் தீவிரவாதிகள் 6 சுட்டுக் கொலை!!
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பண்டிபோரா மாவட்டத்தின் ஹாஜின் பகுதியில் உள்ள சாந்தர்கீர் என்ற கிராமத்தில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பண்டிபோரா மாவட்டத்தின் ஹாஜின் பகுதியில் உள்ள சாந்தர்கீர் என்ற கிராமத்தில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதைத் தொடர்ந்து மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர், ராணுவ வீரர்கள், விமானப்படையின் கருடா பிரிவினர், காஷ்மீர் போலீசார் ஆகியோர் அங்கு விரைந்து சென்ற சுற்றி வளைத்தனர்.
அப்போது, தீவிரவாதிகள் மாற்றும் ராணுவ வீரர்கள் இடையே நடந்த துப்பாக்கி சூடு தாக்குதலில் 6 தீவிரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர்.
அதேநேரம் தீவிரவாதிகளின் தாக்குதலில் கருடா பிரிவு வீரர் ஒருவர் வீரமரணம் அடைந்தார். மேலும் ஒரு வீரர் படுகாயம் அடைந்தனர்.
மும்பை தாக்குதல் சம்பவத்தின் மூளையாக செயல்பட்ட பாகிஸ்தான் தீவிரவாதி ஜகியூர் ரஹ்மான் லக்வியின் நெருங்கிய உறவினர் ஓவைத்தும் இந்தச் சண்டையில் பலியானார். சுட்டுக் கொல்லப்பட்ட தீவிரவாதிகள் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்தவர்களாக இருக்கக்கூடும் என்று தெரிகிறது.