ராஜஸ்தானில் பன்றி காய்ச்சல் மேலும் 6 பேர் பலி, உயிரிழப்பு 125 ஆக உயர்வு!
ராஜஸ்தான் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் பன்றி காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. சமீபத்தில், ஜோத்பூர், கோடா, தவுசா மாவட்டங்களில் பன்றி காய்ச்சலுக்கு 4 பேர் பலியானார்கள். இதன் மூலம் இந்த ஆண்டில் இதுவரை ராஜஸ்தான் மாநிலத்தில் பன்றி காய்ச்சலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 125-ஐ தாண்டியது.

மேலும் 87 பேருக்கு புதிதாக இந்தநோய் அறிகுறி ஏற்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக ஜோத்பூரில் 43 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 39 தினங்களில் ராஜஸ்தானில் 2793 பேருக்கு பன்றி காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதேபோல குஜராத், பஞ்சாப் மாநிலங்களிலும் பன்றி காய்ச்சல் நோய் அதிகரித்து உள்ளது. குஜராத்தில் கடந்த 7 ஆம் தேதி வரை இந்த நோய்க்கு 54 பேர் பலியாகி உள்ளனர். 1187 பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், ராஜஸ்தானில் உள்ள நாகௌர் மற்றும் பரத்பூர் பகுதிகளில் இன்று மேலும், 6 பேர் பலியாகியுள்ளனர். இதுவரை, ராஜஸ்தானில் மொத்தம் 125 பேர் பலியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது!