கொலை, கொள்ளை என 113 வழக்குடைய மாஃபியா `மம்மி` கைது....!
கொலை, கொள்ளை என சுமார் 113 குற்றவழக்குகளில் சிக்கியுள்ள மாஃபியா கூட்டத்தின் தலைவி பசிரான் மம்மி கைது....!
கொலை, கொள்ளை என சுமார் 113 குற்றவழக்குகளில் சிக்கியுள்ள மாஃபியா கூட்டத்தின் தலைவி பசிரான் மம்மி கைது....!
ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த மல்கான் சிங் மற்றும் அவரது மனைவி பசிரான் இருவரும் பிழைப்புக்காகக் கடந்த 45 ஆண்டுகளுக்கு முன் டெல்லி வந்துள்ளார். குடும்ப பொருளாதாரத்தை சமாளிக்கச் சிறு சிறு குற்றச் சம்பவங்களை செய்யத் தொடங்கிய அவர்கள் பிற்காலத்தில் மாஃபியா கூட்டத்திற்கே தலைவியாக மாறியுள்ளார் பசிரான் (வயது 62).
இவருக்கு சுமார் எட்டு மகன்கள். இவர்கள் கொலை, ஒப்பந்தக் கொலை, கொள்ளை, சட்டவிரோத நடவடிக்கை ஆகியவற்றில் தன் மகன்களோடு இணைந்து செயல்பட்ட இவரைக் கூட்டாளிகள் 'மம்மி' என்று அழைப்பார்களாம். இந்த நிலையில், இவரை டெல்லி சங்கம் விஹார் பகுதியில் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இது குறித்து போலீஸார் கூறுகையில், `பெண் குற்றவாளிகளில் தேடப்பட்டுவந்த முக்கிய குற்றவாளி பசிரான். இவர், மீது சுமார் 113 குற்றவழக்குகள் பதிவாகியுள்ளது. தேடப்படும் குற்றவாளியாக இருந்த பசிரான், போலீஸார் பிடியிலிருந்து தப்பிக்க சில நாள்களாகத் தலைமறைவாக இருந்தார். இந்நிலையில், சங்கம் விஹார் பகுதியில் வசிக்கும் தனது குடும்பத்தினரைச் சந்திக்க நேற்று வந்தார். அப்போது காவல்துரியினர் கைது செய்துள்ளனர்.....!
கடந்த 8 மாதங்களுக்கு முன்பு பசிரானும், அவரது கூட்டாளிகளும் சேர்ந்து ஒருவரை, காட்டுப் பகுதிக்கு கடத்திச் சென்று கொலை செய்துள்ளனர். மேலும், அந்த சடலத்தை எரித்துள்ளனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய நபர்களைக் கடந்த ஜனவரி மாதம் போலீஸார் கைது செய்தனர். அதில், பசிரான் மட்டும் தப்பித்து விட்டார்.
இதனிடையில், நடைபெற்ற விசாரணையில் ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்த கொலையை அவர்கள் செய்தது தெரிய வந்தது. பசிரான் கடந்த 16 ஆண்டுகளாகச் சட்டத்துக்கு முரணான குற்றச் செயல்களைச் செய்து வந்துள்ளார்.' என்றார்.