அமெரிக்கா இளைஞர் அந்தமான் தீவில் மர்ம மரணம்; 7 பேர் கைது!
அமெரிக்காவை சேர்ந்த சுற்றுலாபயணி John Allen Chau, அந்தமானில் சடலமாக மீட்கப்பட்ட வழக்கில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்!
அமெரிக்காவை சேர்ந்த சுற்றுலாபயணி John Allen Chau, அந்தமானில் சடலமாக மீட்கப்பட்ட வழக்கில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்!
அமெரிக்காவை செர்ந்த 27-வயது சுற்றலா பயணி John Allen Chau 5 நாட்களுக்கு முன்னதாக அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவிற்கு உள்ளூர் மீனவருடன் பயணம் மேற்கொண்டுள்ளார். இவர் தற்போது அந்தமான் கடற்பகுதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக 7 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மருத்துவ அறிக்கையின் படி Chau கடந்த சனிகிழமை அன்று இறந்துள்ளதாக தெரிகிறது.
முன்னதாக கடந்த நவம்பர் 16-ஆம் நாள் Chau, தனது சிறுபடகு மூலம் தீவினை அடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது. பின்னர் அங்கு வசிக்கும் பழங்குடியின மக்களை அவர் சந்தித்தாகவும் தெரிகிறது. ஆனால் இந்த சந்திப்பிற்கு பின்னர் இவருக்கு என்னவானது என்ற தகவல்கள் இல்லை.
இந்நிலையில் சம்பவம் நிகழ்ந்த பழங்குடி பகுதியில் வசிக்கும் மக்களிடன் விசாரணை நடத்திய காவல்துறை, சந்தேகத்தின் பேரில் 7 பேரை கைது செய்துள்ளது என காவல்துறை ஆணையர் விஜய் சிங் தெரிவித்துள்ளார்.
சம்பவம் நிகழ்ந்துள்ள தீவில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பு நலன் கருதி வெளிநாட்டவர்களை உள் அனுமதிப்பதில்லை என தெரிகிறது. வெளியில் இருந்த வரும் நபர்களை நெறுப்பு, ஆயுதங்களை பயன்படுத்தி விரட்டியடிக்கும் வழக்கத்தினையும் அவர்கள் பின்பற்றி வருகின்றனர். இந்நிலையில் தீவில் பயணம் மேற்கொண்ட Chau அப்பகுதி மக்களால் கொல்லப்பட்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.