உ.பி.யில் ரயில் தடம்புரண்டு விபத்து- பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!

உத்தரப்பிரதேசத்தில் நியூ ஃபரக்கா எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர்.
உத்தரப்பிரதேசத்தில் நியூ ஃபரக்கா எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர்.
உத்தர பிரதேச மாநிலம் ஹர்சந்த்பூர் ரயில் நிலையம் அருகே நியூ ஃபரக்கா எக்ஸ்பிரஸ் ரயில் இன்று காலை தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. 6 பெட்டிகள் தடம்புரண்டதில் அதில் இருந்த பயணிகள் ஒருவர் மீது ஒருவர் விழுந்து பலத்த காயம் அடைந்தனர். மேலும் இந்த விபத்தில் 6 பேர் பலியாகி உள்ளனர்.
லக்னோ மற்றும் வாரணாசியில் இருந்து தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் மீட்பு மற்றும் நிவாரண பணிகளை விரைந்து மேற்கொள்ளும்படி மாவட்ட நிர்வாகம், காவல்துறை மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.