70-வது சுதந்திர தின விழா: அனைவருக்கும் அரசு முக்கியத்தும் -மோடி
சாமானியனின் கனவுகளுக்கும் தேவைகளுக்கும் மத்திய அரசு முக்கியத்துவம் அளிக்கிறது என்று பிரதமர் மோடி கூறிஉள்ளார்.
இந்திய சுதந்திர தினவிழா இன்று நாடு முழுவதும் உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி, டெல்லி செங்கோட்டை மைதானத்தில் தேசிய கொடியை ஏற்றி வைத்து, நாட்டு மக்களுக்கு சுதந்திர தின உரையாற்றுகிறார்.இந்தியா, வெளிநாடுகளில் வாழும் 125 கோடி இந்தியர்களுக்கு சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்தார்.
பிரதமர் மோடி தனது உரையில் கூறியதாவது:- சுதந்திரம் எளிதில் கிடைத்துவிடவில்லை, அனைத்து இந்தியர்களும் போராட்டத்தில் பங்கேற்றனர். காந்தி, சர்தார் பட்டேல், நேரு உள்பட சுதந்திரத்திற்காக பாடுபட்டோரை நினைத்து பார்க்கவேண்டும். இந்தியாவின் வயது 70 அல்ல; காலனி ஆதிக்கத்திற்கு பிறகு சிறந்த இந்தியாவின் வயது 70. இன்றைய தினம் நான் கொள்கைகள் பற்றி பேசப்போவதில்லை தொலைநோக்குத் திட்டம் குறித்து பேசப்போகிறேன் என்றார்.
இந்திய தேசம் பல்வேறு சவால்களை சந்தித்து வருகிறது. ஆனால் அனைத்து சவால்களுக்கும் தீர்வு காணும் திறன் தேச மக்களிடம் இருக்கிறது. இந்தியாவை இதற்கு முன் ஆண்ட அரசை சுற்றி சந்தேக வலைகளே இருந்தன. ஆனால், தற்போதைய அரசை சுற்றி மக்களின் கனவுகள் இருக்கின்றன.
* சாமான்யனின் கனவுகளுக்கும் தேவைகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கும் அரசு இது. சாமான்யர்கள் மேம்பாட்டை பொறுப்புணர்ச்சியுடன் அரசு நிகழ்த்தி வருகிறது.
* 10 சதவிதமாக இருந்த பணவீக்கத்தை 6 சதவிதத்திற்கு மேல் உயராமல் மத்திய அரசு நடவடிக்கையை எடுத்து உள்ளது.
* பாஸ்போர்ட்ட் பெறுவதில் இருந்த சிரமங்கள் நீக்கப்பட்டு ஒரு வாரத்தில் கிடைக்க அரசு நடவடிக்கை எடுத்து உள்ளது.
* ஆதார் மூலம் சமூகநலத் திட்டங்களில் 70 கோடி இந்தியர்கள் இணைக்கப்பட்டு உள்ளனர்.
* 60 நாட்களில் 4 கோடி மக்களுக்கு மேல் மத்திய பாரதீய ஜனதா அரசு எரிவாயு இணைப்பை வழங்கி உள்ளது. கிராமப்புறங்களில் ஒரு நாளைக்கு 75 கிலோ மீட்டர் ஆக இருந்த சாலைப்பணியானது 100 கிலோ மீட்டராக அதிகரிக்கப்பட்டு உள்ளது.
* 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராமங்களில் திறந்தவெளி கழிப்பிடநிலையை மாற்றிஉள்ளோம்.
* ஆதார் மூலம் சமூகநலத் திட்டங்களில் 70 கோடி இந்தியர்கள் இணைக்கப்பட்டு உள்ளனர். ஊழலை ஒழிப்பதற்காகவே ஆதார் கார்டுடன் அரசின் திட்டங்கள் இணைக்கப்பட்டு உள்ளன.
* விவசாயிகள் தண்ணீரை சேகரிக்க சொட்டு நீர் பாசனத்திற்கு அரசு முக்கியத்தும் தருகிறது. பருவமழையால் விளைச்சல் அதிகரித்து உள்ளதால் உணவு பற்றாக்குறையை போக்க உதவும்.
* உலக வெப்பமயமாதலை தடுக்க எல்.இ.டி. பல்புகளை பயன்படுத்தி மின்சாரத்தை சேமிக்க வேண்டும். இலக்கான 77 கோடி எல்.இ.டி. பல்புகளில் 13 கோடி பல்புகளை தலா ரூ. 50-க்கு விற்பனை செய்து உள்ளோம்.
* மின்வசதியில்லாத 18 ஆயிரம் கிராமங்களில் 10 ஆயிரம் கிராமங்களுக்கு மின்வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
* ஆண்டுக்கு 35 ஆயிரம் கிலோ மீட்டர் ஆக இருந்த மின் தடப்பாதை 50 ஆயிரம் கிலோ மீட்டராக அதிகரிக்கப்பட்டு உள்ளது.