அம்பன் புயலால் மேற்கு வங்கத்தில் இதுவரை 72 பேர் உயிரிழந்துள்ளனர் என்று முதல்வர் மம்தா பானர்ஜி தகவல் தெரிவித்துள்ளார்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேற்குவங்கத்தில் அம்பான் புயலுக்கு 72 பலியாகியுள்ளதாகவும், உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலா 2.5 லட்சம் ரூபாய் நிவாரண உதவி வழங்கப்படும் எனவும் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.


வடமேற்கு வங்களா விரிகுடா கடல் பரப்பில் உருவான அம்பான் என்ற சூப்பர் புயல் நேற்று பிற்பகலில் புயல் கரையை கடக்கத் தொடங்கியது. புயல் பிற்பகல் 2.30 மணிக்கு கரையை கடக்க தொடங்கிய நிலையில் கரையை கடந்து முடிக்க 4 மணிநேரத்திற்கும் அதிகமானது.  மேற்குவங்கத்தின் கடல் பகுதி மட்டுமின்றி வங்கதேசத்தின் கடல் பகுதி வழியாகவும் அம்பான் புயல் கரையை கடந்தது.


மேற்குவங்கத்தில் புயல் கரையை கடந்த பகுதி சுந்தர வனக்காடுகள் அதிகம் கொண்ட இடமாகும். உம்பன் புயல் கரையை கடந்தபோது கொல்கத்தாவில் கடும் சூறாவளி காற்று வீசியது. மேற்குவங்க கடலோராத்தில் 5 மீட்டர் உயரத்திற்கு கடல் அலைகள் எழுப்பின. இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் மீட்பு பணிகளை உடனடியாக தொடங்கினர். புயல் கரையை கடந்தபகுதியில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.


மேற்குவங்கத்தில் அம்பான் புயலுக்கு 72 பலியாகியுள்ளதாக அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் ‘‘மேற்குவங்க மாநிலத்தில் 5 லட்சம் பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. 72 பேர் பலியாகியுள்ளதாக இதுவரை தகவல்கள் வந்துள்ளன. பாதிப்பு குறித்து கணக்கெடுத்து வருகிறோம். உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா 2.5 லட்சம் ரூபாய் நிவாரண உதவி வழங்கப்படும்.’’ எனக் கூறினார்.