நியூடெல்லி: நாட்டின் 75வது குடியரசு தினத்தை  இந்திய கடற்படை அண்டார்டிகாவில் வெள்ளிக்கிழமையன்று கொண்டாடியது. கடற்படை வீரர்கள், இந்திய கடற்படை ஹைட்ரோகிராஃபிக் துறை (INHD) குழுவின் மற்ற உறுப்பினர்களுடன் பாரதி ஆராய்ச்சி நிலையத்தில் விழாவை கொண்டாடினர். விழாவைக் குறிக்கும் வகையில் ஆராய்ச்சி நிலையத்தில் தேசியக் கொடி மற்றும் கடற்படை சின்னங்களையும் ஏற்றினார்கள்.



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

"அண்டார்டிகாவில் 2024 குடியரசு தினத்தை கொண்டாடுகிறோம், நாட்டின் தொலைதூரத்தில், இந்திய கடற்படையின் செயல்பாட்டு திறனை வெளிப்படுத்துகிறோம்" என்று இந்திய கடற்படை, த்னது அதிகாரப்பூர்வ X கணக்கில் வெளியிட்ட ஒரு பதிவில் தெரிவித்துள்ளது. மேலும், ஜனவரி 26ம் தேதியன்று குடியரசு தினத்தை கொண்டாடும் பயணக் குழுவின் படங்களையும் பகிர்ந்து கொண்டது.


“பாரதி ஆராய்ச்சி நிலையத்தில் உள்ள லெப்டினன்ட் சிடிஆர் ரிஷப் ராவத் மற்றும் மன்ஜீத் பிஓ (HY) ஆகியோர் அடங்கிய இந்திய கடற்படை ஹைட்ரோகிராஃபிக் துறையின் இந்திய கடற்படையின் ஹைட்ரோகிராஃபிக் ஆய்வுக் குழு மூவர்ணக் கொடியை ஏற்றியது,” என்று கடற்படை மேலும் கூறியது.


INHD ஹைட்ரோகிராஃபிக் ஆய்வுக் குழு, ஜனவரி 17 அன்று அண்டார்டிகாவில் உள்ள பாரதி ஆராய்ச்சி நிலையத்திற்கு வந்தது. அண்டார்டிகாவிற்கு 43 இந்திய அறிவியல் பயணத்தின் (ISEA) ஒரு பகுதியாக லார்ஸ்மேன் ஹில்ஸில் இருந்து ஹைட்ரோகிராஃபிக் கணக்கெடுப்பை மேற்கொள்வதற்காக குழு உள்ளது.


மேலும் படிக்க | Republic Day 2024: குடியரசு தினம் உருவான வரலாறு, முக்கியத்துவம் என்ன?


இந்தியா 75வது குடியரசு தினத்தில் குதிரை பூட்டிய சாரட் வண்டியில் இந்திய குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வந்தார். தலைமை விருந்தினராக பங்கேற்க வந்திருந்த பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானுடன் இந்திய குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுடன் குதிரைகள் பூட்டிய சாரட் வண்டியில் வந்தார். சாரட் வண்டியின் முன்னும் பின்பும் குதிரையில் வீரர்கள் அணிவகுத்து வந்தனர்.


40 வருடங்களுக்கு பிறகு இந்திய குடியரசுத் தலைவர் ஒருவர் இந்த சாரட் வண்டியில் பயணித்துள்ளார். ஆறு குதிரைகள், தங்க முலாம் பூசப்பட்டு, சிவப்பு வெல்வெட் சீட் பொருத்தப்பட்ட இந்த சாரட் வண்டி பிரிட்டிஷ் ஆட்சியின் போது இந்தியாவின் வைஸ்ராய் பயன்படுத்தியது. 


இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு, பிரிவினையின்போது, இந்த சாரட் வண்டி தங்களுக்கு வேண்டும் என இந்தியாவும் புதிதாக உருவான பாகிஸ்தானும் விரும்பின. இந்த வண்டி யாருக்கு சொந்தம் என்பதை டாஸ் போட்டு தீர்மானிக்க முடிவு செய்யப்பட்டது.  அதன்படி, இந்தியாவின் கர்னல் தாக்கூர் கோவிந்த் சிங் மற்றும் பாகிஸ்தானின் சஹாப்ஜாதா யாகூப் கான் ஆகியோர் முன்னிலையில் டாஸ் போடப்பட்டு, அதில் வென்ற இந்தியாவுக்கு சாரட் வண்டி சொந்தமானது.


இந்தியாவிடம் இருந்த ஆறு குதிரைகள் பூட்டிய சாரட் வண்டியை இந்திய குடியரசுத் தலைவர்கள் பயன்படுத்தி வந்தனர். சுதந்திரம் அடைந்து பல ஆண்டுகள் தொடர்ந்த இந்த பாரம்பரியம், பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் காரணமாக நிறுத்தப்பட்டது. சாரட் பூட்டிய தேரில் வருவதற்கு பதிலாக குண்டு துளைக்காத கார்களில் குடியரசுத் தலைவர் வரத் தொடங்கினார்.


மேலும் படிக்க | Republic Day 2024: குடியரசு தின வாழ்த்துக்கள், கவிதைகள், வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ்


இடையில் ஒருமுறை, குடியரசுத் தின விழாவின் மூன்றாம் நாள் கொண்டாடப்படும் பீட்டிங் ரிட்ரீட் விழாவில் கலந்து கொள்ள  2014ம் ஆண்டில் அப்போதைய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி இந்த குதிரை வண்டியை பயன்படுத்தினார். ஆனால், 40 ஆண்டுகளாக குடியரசுத் தின விழாவிற்கு கொடியேற்ற வருகை தரும்எந்தவொரு குடியரசுத் தலைவரும் இந்த வண்டியை பயன்படுத்தவில்லை. 40 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இந்த சாரட் வண்டியை பயன்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.


குடியரசுத் தலைவர் முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சரவை உறுப்பினர்கள், வெளிநாட்டு தூதர்கள் மற்றும் பல முக்கிய பிரமுகர்களுடன் இணைந்து மாபெரும் இராணுவ அணிவகுப்பு மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகளை இந்த ஆண்டு குடியரசு தின விழா நிகழ்ச்சிகளை பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மக்ரோன் கண்டு ரசித்தார்.


குடியரசு தின அணிவகுப்பில் பிரான்ஸ் தலைவர் தலைமை விருந்தினராக கலந்து கொள்வது இது ஆறாவது முறையாகும். "பிரான்சுக்கு ஒரு பெரிய மரியாதை. நன்றி, இந்தியா,” என்று பிரான்ஸ் அதிபர் மேக்ரான் 'X' பதிவில் தெரிவித்துள்ளார். குடியரசு தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி மற்றும் இந்திய மக்களுக்கு வாழ்த்து தெரிவித்த மக்ரோன்,  “என் அன்பு நண்பர் @நரேந்திர மோடி, இந்திய மக்களே, உங்கள் குடியரசு தினத்தில் எனது அன்பான வாழ்த்துக்கள். உங்களுடன் இருப்பதில் மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறேன்!’’ என்று தெரிவித்தார்.


இந்திய குடியரசு தின விழாவில் பங்கேற்க இந்தியாவின் அழைப்பினை ஏற்று உலக தலைவர்கள் இந்தியாவுக்கு வருவது வழக்கம். கடந்த ஆண்டு, எகிப்திய அதிபர் அப்தெல் பத்தா எல்-சிசி இவ்விழாவில் கலந்து கொண்டார். கோவிட்-19 தொற்றுநோய் காரணமாக 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் குடியரசு தினத்திற்கு தலைமை விருந்தினர்கள் அழைக்கப்படவில்லை.


மேலும் படிக்க | ஆர்எஸ்எஸ்-ன் கைப்பாவையாக பிரதமர் மோடி செயல்படுகிறார் -காங்கிரஸ் தலைவர் கார்கே


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ