7th Pay Commission: நிலுவையில் உள்ள DA தொகை பற்றிய முக்கிய செய்தி, இப்போது கிடைக்கும் முழு தொகை
உயர்வு அகவிலை நிவாரணத்துடன் நேராக தொடர்பு உடையதாக இருப்பதால், மத்திய அரசின் அறிவிப்பு மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கும் அதிக அளவில் பயனளிக்கும்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு அவர்களுடைய அனைத்து அகவிலைப்படி நன்மைகளும் முழுமையாகக் கிடைக்கும் என்று சென்ற மாதம் மோடி அரசு அறிவித்ததையடுத்து மத்திய அரசு ஊழியர்களுக்கு பெரிய நிவாரணம் கிடைத்தது. மாநிலங்களவைக்கு அளித்த எழுத்துப்பூர்வமான பதிலில் மத்திய இணை அமைச்சர் அனுராக் தாக்குர் இதை உறுதி படுத்தினார். அமைச்சரின் கூற்றுப்படி, ஜூலை 1 முதல் மத்திய அரசு ஊழியர்களுக்கு டிஏ சலுகைகள் கிடைக்கும்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு மிகவும் தேவைப்படும் நிவாரணத்தைப் பற்றி கூறிய அவர், “ மத்திய அரசு ஊழியர்களுக்கு நிலுவையில் உள்ள மூன்று DA தவணைகள், ஜூலை 1, 2021 முதல் அமல்படுத்தப்படும் DA-வின் ஒட்டுமொத்த திருத்தப்பட்ட விகிதங்களில் அடங்கும்” என்று கூறியிருந்தார். மத்திய அரசு ஊழியர்களுக்கு முழு DA சலுகைகள் கிடைக்கும் என்று அவர் கூறியிருந்தார். ஜூலை 1 முதல், நிலுவையில் உள்ள மூன்று தவணைகளும் அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
"01.07.2021 முதல் வரவிருக்கும் அகவிலைப்படி கொடுப்பனவின் எதிர்கால தவணைகளை வெளியிடுவதற்கான முடிவு எடுக்கப்படும் போது, 01.01.2020, 01.07.2020 மற்றும் 01.01.2021 முதல் நடைமுறைக்கு வரும் டிஏ விகிதங்கள் மீட்டெடுக்கப்பட்டு, 01.07.2021 முதல் ஒட்டுமொத்த திருத்தப்பட்ட விகிதங்கள் கணக்கிட்டு அளிக்கப்படும்” என்று தாகூர் எழுத்துப்பூர்வ பதிலில் மாநிலங்களவையில் தெரிவித்திருந்தார்.
ALSO READ: 7th Pay Commission: இந்த ஊழியர்களின் பதவி உயர்வு பற்றி தெளிவுபடுத்தியது மத்திய அரசு
இதற்கிடையில், DA உயர்வு அகவிலை நிவாரணத்துடன் நேராக தொடர்பு உடையதாக இருப்பதால், இந்த அறிவிப்பு மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கும் (Pensioners) அதிக அளவில் பயனளிக்கும். அதாவது, மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி அதிகரித்தால், ஓய்வூதியதாரர்களில் அகவிலை நிவாரணமும் (DR) தானாக அதிகரிக்கும். மோடி அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையால், மத்திய அரசு ஊழியர்களுக்கு DA-வில் கிடைக்கும் அதே அதிகரிப்பு ஓய்வூதியதாரர்களுக்கும் கிடைக்கும்.
முன்னதாக, கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் ஆகியவற்றின் தவணைகளை மத்திய அரசு முடக்கியிருந்தது. இதன் மூலம், இந்த காலகட்டத்தில், அரசாங்கத்தால் சுமார் ரூ .37,000 கோடிக்கு மேல் சேமிக்க முடிந்தது.
"இந்த முடக்கத்தினால் அரசாங்கம் ரூ .37,430.08 கோடியை மிச்சப்படுத்தியது, இது தொற்றுநோயை சமாளிக்க உதவியது. 1.1.2020, 1.7.2020 மற்றும் 1.1.2021 முதல் நிலுவையில் உள்ள மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணத்தின் மூன்று தவணைகள் கொரோனா வைரஸ் தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு முடக்கப்பட்டன ”என்று நிதி அமைச்சகம் மாநிலங்களவையில் கூறியது.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR