வரி விலக்கு முதல் நிதி நிர்வாகம் வரை: NPS அளிக்கும் நன்மைகள் ஏராளம்!!

PFRDA வின் படி, நிறுவனங்கள் என்.பி.எஸ் திட்டத்தை ஏற்றுக்கொண்டால், அந்தந்த நிறுவனங்களின் ஊழியர்கள் நன்றாக பயனடைவார்கள்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 30, 2021, 06:43 PM IST
  • NPS கணக்கை திறக்க, புதியவர்கள் Kyc-க்காக எந்த ஆவணங்களையும் வழங்க வேண்டியதில்லை.
  • ஆஃப்லைன் ஆதார் மூலமே கணக்கைத் திறக்கலாம்.
  • Auto mode ஆப்ஷனில், 8 நிதி மேலாளர்கள் முதலீட்டாளரின் பணத்தைக் கையாளுகின்றனர்.
வரி விலக்கு முதல் நிதி நிர்வாகம் வரை: NPS அளிக்கும் நன்மைகள் ஏராளம்!!  title=

என்.பி.எஸ் அதாவது புதிய ஓய்வூதிய திட்டம் ஓய்வு பெற்ற பிறகு செலவுகளை ஈடுகட்ட உதவும் ஒரு நல்ல திட்டமாகும். சந்தை வல்லுநர்களின் கூற்றுப்படி, இந்த ஓய்வூதிய திட்டத்தில் அனைவரும் சப்ஸ்க்ரைப் செய்யலாம்.  NPS மீதான தனியார் நிறுவனங்களின் ஈடுபாடும் அதிகரித்து வருகிறது.

PFRDA நிறுவனங்களை என்.பி.எஸ்ஸில் சேர ஊக்குவிக்கிறது. PFRDA வின் படி, நிறுவனங்கள் என்.பி.எஸ் திட்டத்தை ஏற்றுக்கொண்டால், அந்தந்த நிறுவனங்களின் ஊழியர்கள் நன்றாக பயனடைவார்கள். கடந்த ஆண்டு NPS-ல் கிடைத்த வருமானமும் அருமையாக இருந்தது.

8,000 நிறுவனங்களின் NPS பதிவு

இதுவரை 8,000 நிறுவனங்கள் என்.பி.எஸ். ஓய்வூதியத் திட்டத்தில் (Pension Scheme) பதிவு செய்துள்ளன. ஓய்வூதியத் திட்டம் மற்றும் அடல் ஓய்வூதிய திட்டம் (APY) ஆகியவற்றின் கீழ், மொத்த மதிப்பு 5.05 லட்சம் கோடி ரூபாயைத் தாண்டியுள்ளது. கார்ப்பரேட் துறையின் பங்களிப்பு 10 சதவீதம் ஆகும்.

இரண்டு வகையான NPS கணக்குகள் உள்ளன

Wealth Management at Transcend Consultants-ன் மேலாளர் கார்த்திக் ஜாவேரியின் கூற்றுபடி, என்.பி.எஸ்-ஸில் முதலீடு செய்ய இரண்டு வழிகள் உள்ளன. முதல் ஆப்ஷன் – ஆக்டிவ் மோட். இதன் கீழ் முதலீட்டாளர் ஒவ்வொரு ஆண்டும் தங்கள் வருமானத்தைப் பார்த்து, அதற்கேற்ப பங்குகள் மற்றும் கடன்களுக்கான ஆப்ஷன்களை மாற்ற முடியும்.

Auto Mode-ல் 8 நிதி மேலாளர்கள் முதலீடு செய்கிறார்கள்

Auto mode ஆப்ஷனில், 8 நிதி மேலாளர்கள் முதலீட்டாளரின் பணத்தைக் கையாளுகின்றனர். சந்தை போக்குக்கு ஏற்ப பங்கு மற்றும் கடனின் அளவுகளை அவர்கள் மாற்றிக் கொண்டே இருப்பார்கள். NPS-ல் முதலீடு செய்தால், வருமான வரியின் 80CCD பிரிவின் கீழ் வருமான வரி (Income Tax) விலக்கு கிடைக்கும்.

ALSO READ: Budget 2021: வரி விலக்கு முதல் கல்விக் கடன் வரை, இந்தியாவின் Top 10 எதிர்பார்ப்புகள்

இந்த வகையில் கணக்கை திறக்கலாம்

இதில் கணக்கை திறக்க, புதியவர்கள் Kyc-க்காக எந்த ஆவணங்களையும் வழங்க வேண்டியதில்லை. ஆஃப்லைன் ஆதார் மூலமே கணக்கைத் திறக்கலாம். அதன் புகைப்பட நகலும் கொடுக்கத் தேவையில்லை.

E-NPS கணக்கின் விவரங்கள்

சாத்தியமான பங்குதாரர்களின் ஒப்புதலுடன் ஆஃப்லைன் ஆதார் மூலம் NPS கணக்கைத் திறக்க PFRDA ஏற்கனவே E-NPS / பாயிண்ட் ஆஃப் பிரசென்ஸ் மையங்களுக்கு (என்.பி.எஸ் கணக்கு திறக்கப்பட்ட இடத்தில்) அனுமதி அளித்துள்ளது.

ALSO READ: Budget 2021: மருத்துவ உபகரணங்களின் வரி குறையலாம், health sector-ன் எதிர்பார்ப்புகள்

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News