7th Pay Commission: குடும்ப ஓய்வூதியத்தில் மிகப் பெரிய நிவாரணம், விதிகளில் மாற்றம்
COVID-19 தொற்றுநோய் மற்றும் அதன் பின் விளைவுகளுக்கு மத்தியில், இப்போது, குடும்ப உறுப்பினரிடமிருந்து குடும்ப ஓய்வூதியம் மற்றும் இறப்புச் சான்றிதழைப் பெற்ற உடனேயே தற்காலிக குடும்ப ஓய்வூதியம் வழங்கப்படலாம் என்று புதிய அறிவுறுத்தல்கள் தெரிவிக்கின்றன.
COVID-19 தொற்றுநோயின் இரண்டாவது அலை நாட்டு மக்களை பாடாய் படுத்தி வந்த நிலையில், தற்போது படிப்படியாக தொற்று எண்ணிக்கை குறைந்துகொண்டு இருக்கிறது. பொருளாதாரம் இனி மீண்டு வரும் என்ற நம்பிக்கை மெதுவாக அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் மத்திய அரசு ஊழியர்களுக்காக இந்திய அரசு எளிய மற்றும் பாதுகாப்பான குடும்ப ஓய்வூதிய விதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் (Pensioners) நலத்துறை (DoP&PW) செய்த மாற்றங்களைப் பற்றி மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் அறிவித்தார்.
டாக்டர் ஜிதேந்திர சிங் தனது அறிக்கையில், புதிய விதிகள் அறிமுகப்படுத்தப்படும் என்று கூறினார். குடும்ப ஓய்வூதியத்துக்கான கோரிக்கை ரசீதும் இறப்பு சான்றிதழும் குடும்ப உறுப்பினர் மூலம் வழங்கப்பட்ட பிறகு குடும்ப ஓய்வூதியம் வழங்கப்படும் என்று அவர் தெரிவித்தார். இதற்கு எந்தவித தற்காலிக செயல்முறைகளும், செயல்முறை விவரக்குறிப்புகளும் தேவைப்படாது.
ஓய்வூதிய மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் நலத்துறையின் (DoP & PW) கீழ் இந்த விதிகள் கொடிய COVID-19 தொற்றுநோயை எதிர்கொண்டிருக்கும் ஊழியர்களுக்கு பயனளிக்கும்.
"தற்காலிக செயல்முறைகளும், செயல்முறை விவரக்குறிப்புகளுக்கான தேவைகள் நிறைவடையும் வரை காத்திருக்காமல், இறந்த ஊழியரின் குடும்பத்தார் ஓய்வுதியத்துக்கான கோரைக்கையையும் இறப்பு சான்றிதழையும் சமர்ப்பித்தவுடன் உடனடியாக தற்காலிக குடும்ப ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும் என்பதற்கான வழிவகை சமீபத்தில் செய்யப்பட்டது." என்று டாக்டர் ஜிதேந்திரா சிங் கூறியுள்ளதாக ஜீ நியூஸ் தெரிவித்துள்ளது.
ALSO READ: 7th Pay Commission: ஜூலை 1 முதல் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தில் என்ன மாற்றம்?
CCS (ஓய்வூதியம்) விதி 1972 இன் விதிகள் 80 (ஏ) படி, ஒரு அரசு ஊழியர் தனது பணியில் இருக்கும்போது உயிர் இழந்தால், அந்த ஊழியரின் குடும்ப ஓய்வுதிய வழக்கு பே அண்ட் அகவுண்ட்ஸ் அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டவுடன், உடனடியாக ஊழியரின் குடும்பத்துக்கு தற்காலிக குடும்ப ஓய்வூதியம் வழங்கப்படும்.
இருப்பினும், COVID-19 தொற்றுநோய் மற்றும் அதன் பின் விளைவுகளுக்கு மத்தியில், இப்போது, குடும்ப உறுப்பினரிடமிருந்து குடும்ப ஓய்வூதியம் மற்றும் இறப்புச் சான்றிதழைப் பெற்ற உடனேயே தற்காலிக குடும்ப ஓய்வூதியம் வழங்கப்படலாம் என்று புதிய அறிவுறுத்தல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது நிகழ்ந்துள்ள இரண்டாவது சீர்திருத்தம் என்னவென்றால், தற்காலிக ஓய்வூதியத்தை செலுத்துவது இரண்டு நிபந்தனைகளுடன் ஒரு வருடத்திற்கு நீட்டிக்கப்படும். PAO இன் ஒப்புதலுடன் ஓய்வு பெற்ற தேதிக்குப் பிறகு, துறைத் தலைவரின் ஒப்புதலுடன் இது செய்யப்படும்.
இது குறித்து டாக்டர் ஜிதேந்திர சிங் கூறுகையில், “தொற்றுநோயை அடுத்து, ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் நலத்துறை அவ்வப்போது, மூத்த குடிமக்கள் (Senior Citizens) மற்றும் ஓய்வுதியம் பெறுவோர் ஆகியோரது பிரச்சினைகளுக்கும் மிகவும் தகுந்த முறையில் பதிலளித்து வருகிறது. அதன்படி சீர்திருத்தங்களும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன" என்றார்.
ALSO READ: 7th Pay Commission: DA அரியர் தொகை கிடைக்குமா, கிடைக்காதா? குழப்பத்தில் ஊழியர்கள்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR