NACH system: ஞாயிற்றுக்கிழமை, வங்கி விடுமுறையிலும் சம்பளம் ஓய்வூதியம் கொடுக்கப்படும்!

விரைவில் சம்பளம் பெறுவோர், ஓய்வூதியம் பெறுவோர் ஞாயிற்றுக்கிழமை அல்லது விடுமுறை நாட்களில் கூட சம்பளம் மற்றும் ஓய்வூதியத்தைப் பெற முடியும்! இந்திய ரிசர்வ் வங்கி இன்று இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Jun 4, 2021, 08:01 PM IST
  • ஞாயிற்றுக்கிழமை, வங்கி விடுமுறையிலும் சம்பளம் ஓய்வூதியம் கொடுக்கப்படும்!
  • இந்திய ரிசர்வ் வங்கி அறிவிப்பு
  • NACH கட்டண முறை ஆகஸ்ட் 1 முதல் தினசரி இயங்கும்
NACH system: ஞாயிற்றுக்கிழமை, வங்கி விடுமுறையிலும் சம்பளம் ஓய்வூதியம் கொடுக்கப்படும்!  title=

புதுடெல்லி: விரைவில் சம்பளம் பெறுவோர், ஓய்வூதியம் பெறுவோர் ஞாயிற்றுக்கிழமை அல்லது விடுமுறை நாட்களில் கூட சம்பளம் மற்றும் ஓய்வூதியத்தைப் பெற முடியும்! இந்திய ரிசர்வ் வங்கி இன்று இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இனிமேல், தேசிய தானியங்கி கிளியரிங் ஹவுஸ் (National Automated Clearing House (NACH)) கட்டண முறை ஆண்டு முழுவதும் எல்லா நாட்களிலும் கிடைக்கும். முன்னதாக, வங்கிகளின் வேலை நாட்களில் மட்டுமே இந்த வசதி இருந்தது. 

இன்று ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்தி காந்த தாஸ் வெள்ளிக்கிழமை (ஜூன் 04, 2021) வெளியிட்ட அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது. இரு மாதங்களுக்கு ஒரு முறை ரிசர்வ் வங்கி வெளியிடும் நாணய கொள்கை அறிக்கை 2021இன் ஒரு பகுதியாக இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.  

Also Read | Lockdown பொதுமக்களுக்கு மட்டும் தானா? ஆட்டோமொபைல் நிறுவனங்களுக்கு இல்லையா? 

ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்தி காந்த தாஸ் தனது பணவியல் கொள்கை அறிக்கையில் இவ்வாறு தெரிவித்திருக்கிறார்: “வாடிக்கையாளர் வசதிக்காக, ஆண்டின் அனைத்து நாட்களிலும் ஆர்டிஜிஎஸ் (RTGS) பயன்படுத்திக் கொள்ளவும்,ஆண்டு முழுவதும் வாரத்தின் அனைத்து நாட்களிலும் NACH சேவை கொடுக்கவேண்டும் என்று முன்மொழியப்பட்டது. ” 

NACH கொடுப்பனவு முறை என்றால் என்ன?
மொத்தமாக பணம் செலுத்தும் முறை NACH கொடுப்பனவு முறை. ஈவுத்தொகை (dividend), வட்டி, சம்பளம், ஓய்வூதியம் என பலவிதமான கொடுப்பனவுகளை செலுத்த இந்த அமைப்பு பயன்படுத்தப்படுகிறது. இவற்றைத் தவிர, மின்சாரம், எரிவாயு, தொலைபேசி, நீர், கடன்களுக்கான குறிப்பிட்ட தவணைகள், முதலீடுகள், பரஸ்பர நிதிகள், காப்பீட்டு பிரீமியம் தொடர்பான கொடுப்பனவுகளுக்கு NACH கட்டண முறை பயன்படுத்தப்படுகிறது.

நாச் ஒரு பிரபலமான மற்றும் முக்கிய டிஜிட்டல் பயன்முறையாகும். நேரடி பயன் பரிமாற்றத்தின் (direct benefit transfer (DBT)) மூலம் அதிக எண்ணிக்கையிலான பயனாளிகளுக்கு பணம் செலுத்த இது பயன்படுத்தப்படுகிறது. அரசாங்க மானியங்களை பயனாளிகளின் கணக்குக்கு மாற்றுவதற்கு இது பெரிதும் உதவுகிறது.  குறிப்பாக தற்போதைய COVID-19 காலத்தில் உரிய நேரத்தில், வெளிப்படையான முறையில் பண பரிமாற்றத்திற்கு NACH பயன்படுவதாக ரிசர்வ் வங்கி கூறுகிறது.

வாடிக்கையாளர் வசதிக்காக, மற்றும் ஆண்டின் அனைத்து நாட்களிலும் ஆர்.டி.ஜி.எஸ் கிடைப்பதைப் பயன்படுத்திக்கொள்ளும் வகையில் இது திட்டமிடப்பட்டுள்ளது. 2021 ஆகஸ்ட் 1 முதல் ஆண்டு முழுவதும் வாரத்தின் அனைத்து நாட்களிலும் NACH செயல்படத் தொடங்கும் என ரிசர்வ் வங்கியின் அறிக்கை கூறுகிறது.

இதன் பொருள் ஆகஸ்ட் 1 முதல் ஞாயிற்றுக்கிழமை மற்றும் விடுமுறை நாட்களில் கூட உங்களுடைய சம்பளம் மற்றும் ஓய்வூதியம் உங்களுக்குக் கிடைக்கும். 

Also Read | சச்சின் டெண்டுல்கரின் வெற்றி ரகசியத்தை சொல்லும் சத்குரு; இது சரியா?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News