7th Pay Commission Latest News: சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையிலான மத்திய பிரதேச அரசு ஹோலிக்கு முன்பு சுமார் 4 லட்சம் மாநில அரசு ஊழியர்களுக்கு பெரிய நிவாரணத்தை வழங்க திட்டமிட்டுள்ளது. ஹோலி பண்டிகைக்கு முன்னதாக அரசு ஊழியர்கள் அரியர் தொகை முழுவதையும் பெறுவதை உறுதி செய்வதற்காக மத்திய பிரதேச நிதித் துறையும் இதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக ஜீ செய்தி அறிக்கை தெரிவிக்கிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஊழியர்களின் அகவிலைப்படியையும் (DA) மத்திய பிரதேச மாநில அரசு 13 சதவீதம் அதிகரிக்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மாநில அரசு ஊழியர்களுக்கு மிகவும் தேவையான நிவாரணத்தை அளிக்கும். லட்சக்கணக்கான ஊழியர்கள் இதனால் பயனடைவார்கள்.


எனினும், இது தொடர்பான இறுதி முடிவு தேவையான ஆவண பணிகளை முடித்த பின்னர் எடுக்கப்படும் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


மார்ச் 2021 க்குள் நிலுவையில் (Arrear Amount) உள்ள 75% நிலுவைத் தொகையை ஏழாவது ஊதிய அளவில் அளிக்க மாநில அரசு திட்டமிட்டுள்ளது.


முன்னதாக, COVID-19 நெருக்கடியைக் கருத்தில் கொண்டு ஏழாவது ஊதிய அளவிலான நிலுவைத் தொகையின் கடைசி தவணையை செலுத்துவதை மாநில அரசு நிறுத்தி வைத்தது. நிலுவைத் தொகை 2020 மே மாதம் செலுத்தப்பட இருந்தது.


ALSO READ: 7th Pay Commission: NPS, OPS ஓய்வூதிய திட்டம் குறித்த மிகப்பெரிய அறிவிப்பை அளித்தது நிதி அமைச்சகம்


கடந்த ஆண்டு நிலுவைத் தொகையில் 25 சதவீதத்தை மாநில அரசு செலுத்தியிருந்தது.


மீதமுள்ள நிலுவைத் தொகையை மூன்று தவணைகளில் செலுத்த வேண்டி இருந்தது என்று துறை அதிகாரிகள் கூறுகின்றனர். முதல் இரண்டு தவணைகள் வழங்கப்பட்டுள்ளன. இப்போது, ​​நிலுவையில் உள்ள தவணையில் 75% செலுத்தப்பட வேண்டும்.


அதே நேரத்தில், சிவராஜ் சிங் அரசாங்கம் ஊழியர்களின் (Government Employees) DA-வை 13 சதவீதம் அதிகரிக்கக்கூடும் என்று ஏராளமான ஊகங்கள் உள்ளன. அரசாங்கம் இந்த அறிவிப்பை வெளியிட்டால், மாநிலத்தின் லட்சக்கணக்கான ஊழியர்களுக்கு இது மிகப்பெரிய நிவாரணமாக இருக்கும்.


ALSO READ: 7th Pay Commission: விரைவிலேயே DA, DR hike பற்றிய அறிவிப்பை வெளியிடும் மோடி அரசு


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR