7th Pay Commission latest: பயணப்படியில் அரசு ஊழியர்களுக்கு மத்திய அரசின் good news
நிதியமைச்சகத்தின் கீழ் உள்ள செலவுத் துறை (DoE) சமீபத்தில் பயணப்படி விதிகளை தளர்த்துவதற்கான முடிவு குறித்த விவரங்களைத் தெரிவிக்கும் உத்தரவை வெளியிட்டுள்ளது.
7th Pay Commission Latest News: புத்தாண்டுக்கு சில நாட்களே உள்ள நிலையில், மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு பெரிய நிவாரணத்தை அரசு அறிவித்துள்ளது. புதுப்பிப்புகளின்படி, நிதியமைச்சின் கீழ் உள்ள செலவுத் துறை (DoE) சமீபத்தில் பயணப்படி (Travel Allowance) விதிகளை தளர்த்துவதற்கான முடிவு குறித்த விவரங்களைத் தெரிவிக்கும் உத்தரவை வெளியிட்டுள்ளது.
இந்த உத்தரவை பிறப்பித்து, ஊதிய நிலை 9 முதல் 11 சம்பள மேட்ரிக்ஸில் உள்ள மத்திய அரசு ஊழியர்கள் இனி பயணப்படி (Travel Allowance) கோர பயண தேதிகள் மற்றும் வாகன எண் போன்ற விவரங்களுடன் சுய சான்றிதழை வழங்க வேண்டியதில்லை என்று மத்திய அரசு கூறியுள்ளது.
“பாரா 2 இ ( i) 13.07.2017 தேதியிட்ட இந்த துறையின் OM இணைப்பின் படி நகருக்குள் பயணம் செய்ததற்கான பயண கட்டணங்களின் தினசரி கொடுப்பனவுகளைக் கோர ரசீதுகள், வௌசர்கள் ஆகியவற்றை சமர்பிப்பதில் ஊதிய நிலை 9 முதல் 11-ல் உள்ள அதிகாரிகள் அதிக சிரமங்களை எதிர்கொள்வதாக இந்த துறையில் பல குறிப்பீடுகள் வழங்கப்பட்டுள்ளனன.
ALSO READ: LPG Cylinder Latest Updates: LPG சிலிண்டர் விகிதங்கள் குறித்து அரசு பெரிய முடிவு?
இந்த விஷயம் பரிசீலிக்கப்பட்டுள்ளது. 13.07.2017 தேதியிட்ட OM இன் பாரா 2E (i) இல் குறிப்பிடப்பட்டுள்ளபடி சுற்றுப்பயணத்தில் கீழ் ஏற்றுக்கொள்ளக்கூடிய பயணக் கட்டணங்களுக்காக தொகையை திரும்பப் பெற, ஊதிய நிலை 9 முதம் 11-ல் உள்ள அதிகாரிகளுக்கு ரசீதுகள் / வவுச்சர்களை அளிக்க வேண்டிய கட்டாயம் நீக்கப்பட்டுள்ளது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.” என்று மத்திய அரசின் உத்தரவு குறிப்பிட்டது.
உத்தரவின் படி, 9 ஆம் நிலை மற்றும் அதற்கு மேற்பட்ட மத்திய அரசு ஊழியர்கள் (Central Government Employees) முன்னர் நகரத்திற்குள் பயணிப்பதற்கான தொகையை திரும்பப் பெற வவுச்சர்களை சமர்பிக்க வேண்டி இருந்தது. ரசீதுகள் மற்றும் வவுச்சர்களை சமர்ப்பிப்பதில் ஊழியர்கள் எதிர்கொள்ளும் சிரமங்கள் குறித்து ஏராளமான புகார்களைப் பெற்றபின், DOE இன் இந்த உத்தரவு வந்தது.
‘பயணக் கொடுப்பனவு விதிகள் - 7 வது சிபிசி அமலாக்கம்’ என்பதன் கீழ், நகரத்திற்குள் பயணத்திற்கான பயணக் கட்டணங்களை திரும்பப் பெற மத்திய அரசு முன்னர் தொகை திரும்பப் பெறும் வழிமுறையை பரிந்துரைத்திருந்தது. இந்த பழைய உத்தரவு 8 ஆம் நிலை மற்றும் அதற்குக் கீழான அரசு ஊழியர்களிடம் சுய சான்றிதழ் காட்டி எந்த வவுச்சர்களையும் அளிக்காமல் பயணக் கட்டணங்களை திரும்பப் பெறலாம் என்று கூறியிருந்தது.
பயணக் கொடுப்பனவில் தளர்வு தவிர, அடுத்த ஆண்டு ஜூன் மாதத்தில் அகவிலைப்படி அதிகரிப்பையும் மத்திய அரசு (Central Government) அறிவிக்கும். ஒவ்வொரு ஆண்டும், அரசு ஊழியர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த அகவிலைப்படி அளிக்கப்படுகின்றது. இது ஆண்டுக்கு இரண்டு முறை அதிகரிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. பணவீக்கம் அதிகரித்த பின்னர் ஊழியர்களின் வாழ்க்கைத் தரம் பாதிக்கப்படாமல் இருக்க இது செய்யப்படுகிறது.
ALSO READ: FASTag குறித்த கவலைக்கு டாட்டா; இனி எல்லாத்தையும் My FASTag App பாத்துக்கும்!
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR