7-வது சம்பள கமிஷன்: இன்று முடிவு
மத்திய அரசு ஊழியர்களுக்கு அடிப்படை ஊதியத்தை அதிக அளவு உயர்த்தும்படி அமைச்சரவை செயலர்கள் குழு தாக்கல் செய்த பரிந்துரைக்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளிக்கும் என எதிர் பார்க்கப்படுகிறது.
மத்திய அரசு துறைகளில் பணியாற்றி வரும் ஊழியர்களுக்கு அடிப்படை ஊதியத்தை உயர்த்தலாம் என 7-வது ஊதிய குழு அமைச்சரவை செயலர் பி.கே.சின்ஹா தலைமையிலான செயலர்கள் குழு அமைக்கப்பட்டது.
இக்குழு ஊதிய குழுவின் பரிந்துரைகளை ஆராய்ந்து சமீபத்தில் தனது இறுதி அறிக் கையை தாக்கல் செய்தது. இந்த அறிக்கையின் அடிப்படையில் நிதியமைச்சகம் குறிப்பு தயாரித்து அமைச்சரவையின் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்துள்ளது.
திருத்தப்பட்ட இந்த பரிந் துரைக்கு மத்திய அரசு இன்று ஒப்புதல் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பின் புதிய ஊதிய உயர்வு ஜனவரி 1-ல் இருந்து முன் தேதியிட்டு வழங்கப்படும் என்றும் தெரிய வந்துள்ளது. இதன் மூலம் மத்திய அரசு பணியாளர்கள், ஓய்வூதியதாரர்கள் என சுமார் 1 கோடி பேர் பயனடையவுள்ளனர்.
ஊதிய உயர்வுக்கு ஒப்புதல் வழங்கப்படுவதால் மத்திய அரசுக்கு ரூ.1.02 லட்சம் கோடி வரை கூடுதல் நிதி சுமை ஏற்படும்.