கொரோனாவுடன் மலேசியா தப்ப முயன்ற 8 பேர் டெல்லியில் பிடிபட்டனர்...
தப்லிகி ஜமாத்துடன் தொடர்புடைய 8 மலேசியர்கள், டெல்லியில் இருந்து மீட்பு விமானத்தில் பறக்க முயற்சித்தப்போது பிடிப்படத்தாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தப்லிகி ஜமாத்துடன் தொடர்புடைய 8 மலேசியர்கள், டெல்லியில் இருந்து மீட்பு விமானத்தில் பறக்க முயற்சித்தப்போது பிடிப்படத்தாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
டெல்லி IGI விமான நிலையத்திலிருந்து ஞாயிற்றுக்கிழமை மலேசியாவுக்கு தப்பிச் செல்ல முயன்றதாக 8 பேர் பிடிபட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் மலேசிய பிரஜைகள் எனவும், அண்மையில் நிஜாமுதீனில் நடந்த தப்லிகி ஜமாஅத் நிகழ்வில் பங்கேற்றதை மறைத்து வைத்திருப்பதாகவும் சந்தேகிக்கப்படுகின்றனர்.
இந்தியாவில் இருந்து மலேசியாவுக்குச் சென்று கொண்டிருந்த நிவாரண விமானத்தில் ஏற முயன்றபோது இந்த 8 மலேசியர்களும் பிடிப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா அச்சத்திற்கு மத்தியில் தற்போது அனைத்து பயணிகள் விமானங்களும் இடைநிறுத்தப்பட்டுள்ள நிலையில், இந்த குழு மலிண்டோ ஏர்வேஸ் விமானத்தில் ஏற முயன்றுள்ளது. இந்த 8 பேர் டெல்லியின் பல்வேறு பகுதிகளில் பதுங்கி இருந்ததாகவும், ஞாயிற்றுக்கிழமை விமான நிலையத்தில் கூடி நாட்டை விட்டு வெளியேற முயற்சித்ததாகவும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் மார்ச் மாத தொடக்கத்தில் நடந்த நிஜாமுதீன் நிகழ்ச்சியில் அவர்கள் கலந்து கொண்டிருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகின்றனர்.
மேலும் இந்தக் குழு தற்போது மேலதிக நடவடிக்கைகளுக்காக டெல்லி காவல்துறை மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இந்தோனேசியா மற்றும் மலேசியாவிலிருந்து வெளிநாட்டினர் உட்பட 2,000-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் மார்ச் 1-15 முதல் நிஜாமுதீன் மேற்கில் உள்ள தப்லிகி ஜமாஅத் சபையில் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பல நூறு பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்ட பின்னர் தெற்கு டெல்லி சுற்றுப்புறம் கிட்டத்தட்ட மூடப்பட்டது.
டெல்லியில் பதிவாகியுள்ள கொரோனா வழக்குகளில், 301 உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா வைரஸ் வழக்குகள் நிஜாமுதீன் நிகழ்வில் தோன்றியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மாநிலத்தில் இருந்து வைரஸ் பல மாநிலங்களுக்கு பரவியுள்ள நிலையில் நிஜாமுதீன் இப்போது இந்தியாவின் சமீபத்திய ஹாட்ஸ்பாட்டாக மாறியுள்ளது. இதற்கிடையில், தப்லீஹி ஜமாஅத் நிகழ்வு தொடர்பாக உள்துறை அமைச்சகம் 960 வெளிநாட்டினரை தடுப்புப்பட்டியலில் பதிவு செய்து அவர்களின் சுற்றுலா விசாக்களை ரத்து செய்துள்ளது.