கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் சுமார் 86 ஒரிசா குழந்தைகளை வெளிநாட்டு தம்பதியர்கள் தத்தெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஒரிசா மாநில மேம்மாட்டுத்துறை அமைச்சர் பர்புல்லா சாமுவல் இதுகுறித்து தெரிவிக்கையில்... கடந்த 2015 முதல் இதுவரை சுமார் 86 குழந்தைகளை வெளிநாட்டு தம்பதியருக்கும் குறிப்பிட்ட சிறப்பு தத்தெடுப்பு மையத்தின் மூலம் கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.


2015-ஆம் ஆண்டில் மட்டும் 33 குழந்தைகள் எனவும், அடுத்த இரண்டு ஆண்டுகளில் முறையே 24 மற்றும் 29 என மொத்தம் 86 குழந்தைகள் என அவர் பட்டியலினையும் குறிப்பிட்டுள்ளார்.


ஒரிசாவின் குருடா மாவட்டத்தின் சுபத்தரா மஹாபத் சாதன் என்னும் மையத்தில் தான் அதிகப்பட்சமாக 25 தத்தெடுப்பு நிகழ்வு நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


தத்து கொடுக்கப்பட்ட குழந்தைகளின் நிலைமை குறித்து சஞ்சீவ் குமார் சாஹூ வினவுகையில், இதுவரை அக்குழந்தைகள் குறித்த அசாதாரண செய்திகள் ஏதும் நிகழவில்லை என தெரிவித்துள்ளார்!