இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஈரான் அதிபர் ஹசன் ரவுகானி நேற்று முன்தினம் ஐதராபாத் வந்தடைந்தார். பின்னர் ஐதராபாத் இஸ்லாமிய கல்வியாளர்கள் மற்றும் மார்க்க அறிஞர்கள் மாநாட்டில் சிறப்புரையாற்றினார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதனையடுத்து நேற்று கோல்கொண்டா பகுதியில் உள்ள வரலாற்று சிறப்பு மிக்க நினைவிடங்களை பார்வையிட்ட அவர், சார்மினார் அருகேயுள்ள பிரபல மெக்கா மசூதியில் நடைபெற்ற ‘ஜும்மா’ தொழுகையில் பங்கேற்றார். 


இந்த நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு நேற்று மாலை அவர் டெல்லிக்கு புறப்பட்டு சென்றார். டெல்லி வந்தடைந்த அவரை டெல்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடி சந்தித்தார். 


இச்சந்திப்பின்போது வர்த்தகம், பாதுகாப்பு, நாட்டின் ஆற்றல் ஆகிய முக்கிய பகுதிகளை முன்னேற்றும் பொருட்டு, இரட்டை வரி விலக்கு உட்பட 9 ஒப்பந்தங்களில் இரு நாட்டுத் தலைவர்களும் கையெழுத்திட்டனர்.



முன்னதாக சந்திப்பின் போது, நாட்டின் ஒற்றுமை உட்பட முக்கிய அம்சங்களின் ஒத்துழைப்பை எவ்வாறு பலப்படுத்த வேண்டும் என்பது குறித்து இருநாட்டு தலைவர்களும் பரிமாறிக கொண்டனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.