ஒடிசா: திருமண வரவேற்ப்பு நிகழ்ச்சிக்கு வந்த பரிசு பொருளில், மர்ம நபர் வைத்த வெடிகுண்டு வெடித்து விபத்துக்குள்ளானதில் மணமகன் மற்றும் அவரது பாட்டி பலியாகினர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இச்சம்பவத்தில் பலத்த காயங்களுடன் உயிர் பிழைத்த மணப்பெண், சிகிச்சைக்காக மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முன்னதாக, மணமகனின் பாட்டி காயங்களுடன் போலாங்கீர் மருத்துவமணைக்கு கொண்டுச்செல்கையில் வழிலேயே அவர் உயிர் பிரிந்தது.


சம்பந்தப்பட்ட குடும்பம் வசிக்கும் ப்ரமாப்பூரா பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. 


உள்ளூரு ஊடக தகவலின்படி, சௌமியா சேகர் மற்றும் ரீமா சாஹூ தம்பதியினர் கடந்த பிப்., 18 அன்று திருமணம் செய்துகொண்டனர். பின்னர் அவர்களது வரவேற்பு நிகழ்ச்சி கடந்த பிப்., 21 அன்று நடைப்பெற்றுள்ளது.


இந்த வரவேற்பு நிகழ்ச்சியின் போது வந்த பரிசுபொருளினை இந்தம்பதியினர் பிரிக்கையில், உள்ளிருந்த வெடிகுண்டு வெடித்து சிதறியது. 


முதற்கட்ட விசாரணையில் பரிசுப்பொருளின் உள்ளே இருந்தது, கச்சா குண்டு என கண்டறியப்பட்டுள்ளது. 


இச்சம்பவம் குறித்து குடும்பத்தார் தெரிவிக்கையில், யார் வைத்தார் என்று யூகிக்க இயலவில்லை, என தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து போலங்கீர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.