கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி நாளை டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேச உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

எந்த வருடமும் இல்லாத அளவுக்கு இந்த வருடம் தென்மேற்கு பருவமழை கர்நாடகா மற்றும் கேரளாவில் வெளுத்து வாங்கியது. இதனால், பல்வேறு பகுதிகள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது. குடகு மாவட்டத்தில் ஏற்பட்ட கடுமையான நிலச்சரிவுகள் மழை வெள்ளம் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளுக்கு நிவாரண நிதி கோரி அவர் இந்தப் பயணத்தை மேற்கொள்கிறார். 


வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள மத்திய அரசின் உதவியை அவர் நாடியுள்ளார். முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய குமாரசாமி, கேரளாவுக்கு 500 கோடியை கொடுத்த பிரதமர் மோடி, கர்நாடகத்திற்கு 100 கோடியாவது தர வேண்டும் என்று வலியுறுத்தினார்.