காளை தாக்கி வெளிநாட்டு பயணி மரணம்!
காளை தாக்கியதில் வெளிநாட்டு பயணி ஒருவர் மரணமடைந்தார்.
ஜெய்ப்பூரில் இன்று காலை ஒரு வெளிநாட்டு பயணி சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அங்கிருந்து வந்த ஒரு காளை அவரைத் தாக்கியது.
அருகில் இருந்த மக்கள் அவரை விரைந்து மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். பின்னர், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இவரைப் பற்றிய தகவல்கள் ஏதும் தெரியவில்லை. அவரைப்பற்றி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.