குர்கான்: இன்று(வியாழன்) காலை ஹரியானவின் குர்கானில் உள்ள மாருதி சுசுகி  ஆலையில் சிறுத்தை ஒன்று நுழைந்து மக்களை பெரும் பீதியில் ஆழ்த்தியது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறையினர் சிறுத்தையினை பிடித்தனர்.


ஆலையின் என்ஜின் பகுதியில் காலை 4 மணியளவில் சிறுத்தையின் நடமாட்டம் காணப்பட்டுள்ளது. பின்னர் காலை 7 மணிவரை பணிக்கு வந்திருந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை பாதுகாப்பு காரணம் கரதி ஆலைக்கு வெளியே நிற்கவைக்கப்பட்டனர்.


பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த கவலார்களையும் ஆலையில் இருந்து விலகி செல்லும்படி வனத்துறையினர் கேட்டுக் கேட்டுக்கொண்டனர்.


"வனத்துறை, காவல்துறை மற்றும் வனவிலங்குத் துறையினர், ஆகியோர் அடங்கிய குழு இந்த சிறுத்தையினை பிடிக்கும் பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர்.


இதற்கு முன்னர் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம், சிறுத்தை ஒன்று சோஹ்னாவில் ஒரு வீட்டில் நுழைந்ததில் ஐந்து பேர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.