கொரோனா தொற்று ஏற்பட்ட தாய் மரணமடைந்ததை அடுத்து, மருத்துவரை சரமாரியாக கத்தியால் குத்திய கொடூர சம்பவம் மகாராஷ்ட்ராவில் நடந்துள்ளது 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பலத்த காயமடைந்த மருத்துவர், வேறு ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.


மகாராஷ்டிராவின் லாதூர் நகரில் உள்ள மருத்துவமனையில் இறந்த கோவிட் -19 நோயாளியின் மகன், புதன்கிழமை ஒரு மருத்துவரை தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இங்குள்ள ஆல்பா சூப்பர்ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் காலை 7 மணியளவில் இந்த சம்பவம் நடந்ததாக போலீசார் தெரிவித்தனர்.


35 வயதான அந்த நபர், உத்கிரில் வசிப்பவர் என்று போலீசார் தெரிவித்தனர்.


கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக பரிசோதனையில் உறுதிபடுத்தப்பட்ட பின்னர் அவரது 60 வயது தாய் ஜூலை 25 அன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்று  போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


வேறு வகை நோயால் நீண்ட நாளாக உடல நல பாதிக்கப்பட்டிருந்த அந்த பெண்மணி, கொரோனா தொற்றும் ஏற்பட்டதை அடுத்து புதன்கிழமை அதிகாலை இறந்தார்.


அவரது உடல்நிலை குறித்து முன்னதாகவே, அவரது உறவினர்களிடம் டாக்டர் தினேஷ் வர்மா எடுத்துரைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  மருத்துவமனைக்கு வந்த ​​இறந்த பெண்மணியின் மகனும் மற்ற மூன்று உறவினர்களும் அந்த பெண்ணின் மரணம் குறித்து மருத்துவருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.


ALSO READ | ஆரவல்லி மலைத் தொடரில், ட்ரோன்கள் உதவியுடன் 5 லட்சம் விதைகளை தூவியது ஹரியானா வனத்துறை


அப்போது, மகன் திடீரென்று ஒரு கூர்மையான ஆயுதத்தை எடுத்து வர்மாவை மார்பு, கழுத்து மற்றும் கையில் குத்தினார் என்று காவல் துறை அதிகாரி கூறினார்.


பலத்த காயமடைந்த வர்மா மற்றொரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தாக்குதல் நடத்தியவர் விரைவில் கைது செய்யப்பட்டதாக காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.


ALSO READ | கொரோனா பயத்துல குழம்பாதீங்க… தேவையில்லாம யோசிச்சு பதறாதீங்க..!!!


இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள, இந்திய மருத்துவ சங்கத்தின் உள்ளூர் கிளை, மாவட்டத்தில் வெளி நோயாளிகள் பிரிவு (OPD) ஒரு நாள் மூடப்படும் என்று அறிவித்தது. மருத்துவர்கலுக்கு காவல்துறை பாதுகாப்பு கொடுக்கப்பட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.