மும்பையில் ஒரு அரிய சம்பவம், 45 வயதான பெண் தனது மருமகளை காப்பாற்ற தன் சொந்த மகனைக் கொன்றுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அன்வாரி இட்ரஸியின் இளைய மகன் நதீம், இவர் போதைப் பொருளுக்கு அடிமையாகி, மனைவியை கொடுமை செய்து வந்துள்ளார். இதனால் நதீம்ன் மனைவி அவரது மாமியார் வீட்டை விட்டு வெளியேறியது. 


ஏஎன்ஐ-இன் தகவல்களின்படி, ஆகஸ்ட் 15-ம் தேதி இரவு நதீம் வீட்டில் குடித்துவிட்டு வந்துள்ளார். பிரச்னை ஏதும் நிகழாமல் இருக்க அன்று இரவு இட்ரஸி தனது இரண்டு மூத்த மகன்கள், மருமகள்களையும் பக்கத்துக்கு வீட்டில் தூங்குவதற்கு அறிவுறுத்தியுள்ளார்.


முழு குடும்பமும் அங்கு இருந்ததை அறிந்த நதீம், தனது தாயை அடித்துள்ளார். அப்போது நடந்த தகராறில் இட்ரிஸ் நதீம்-னை பின் பக்கமாக தள்ளியுள்ளார். அப்போது செவிற்றில் சாய்த்து வைக்கப்பட்டிருந்த ஸ்டீல் ஏணியில் நதீம் விழுந்து, தனது தலையில் அடிப்பட்டு உயிர் இழந்துள்ளார்.


வீட்டிற்கு திரும்பி வந்த நதிமின் மனைவி, சம்பவத்தை உணர்ந்து காவல்துறையில் தகவல் கொடுத்துள்ளார்.


பின்னர் இட்ரஸி காவல் துறையால் கைதுசெய்து இந்திய தண்டனைச் சட்டத்தின் (IPC) 302 பிரிவின் கீழ் வழக்கை பதிவு செய்துள்ளனர். இதனையடுத்து ஆகஸ்ட் 31 வரை காவலில் வைக்கப்பட்டுள்ளார்.