காஷ்மீர் பிரச்சினையில் அடிக்கடி இந்திய எதிர்ப்பு அறிக்கைகளை வெளியிட்டு வரும் துருக்கி, இப்போது அதற்கு அடுத்த கட்டத்திற்கு முன்னேறியுள்ளது. கிழக்கு சிரியாவிலிருந்து தீவிரவாதிகளை ஜம்மு-காஷ்மீருக்கு அனுப்ப துருக்கி தயாராகி வருவதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த பயங்கரவாதிகளுக்கு, இதற்கான கூலியாக இரண்டாயிரம் அமெரிக்க டாலர்கள் வழங்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜம்மு-காஷ்மீர் (Jammu Kashmir) பிரச்சினையை ஒரு சர்வதேச பிரச்சினையாக மாற்றவும், தனது நட்பு நாடான பாகிஸ்தானுக்கு உதவவும் துருக்கி தொடர்ச்சியாக முயற்சிகள் மேற்கொண்டு வரும் நிலையில் இந்த அறிக்கை வெளி வந்துள்ளது. துருக்கியின் இந்திய எதிர்ப்பு கருத்துக்கள் குறித்து கருத்து தெரிவித்த இந்தியா, ஜம்மு-காஷ்மீர் பிரச்சினை இந்தியாவின் உள் விவகாரம் என்பதை தெளிவுபடுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


கிரேக்க நாட்டில்  ஒரு பத்திரிகையாளரான ஆண்ட்ரியாஸ் மவுண்ட்ஜோரலியாஸ் துருக்கியின் இந்த மோசமான சதி திட்டத்தை தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. இதில் துருக்கிய (Turkey) அதிபர் ரெச்சப் தயிப் எர்டோகன் (Turkey President Recep Tayyip Erdogen) சிரிய பயங்கரவாதிகளை ஜம்மு-காஷ்மீருக்கு அனுப்பும் திட்டத்தை பற்றி விரிவாகக் கூறுகிறது.


உலகில் இஸ்லாமிய நாடான சவுதி அரேபியாவின் செல்வாக்கை குறைக்க சதி திட்டம் தீட்டி வரும் துருக்கி, தெற்காசியாவில் முஸ்லிம்களிடையே தனது செல்வாக்கை அதிகரிப்பதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாக காஷ்மீருக்கு பயங்கரவாதிகளை அனுப்ப திட்டம் தீட்டி வருகிறது. காஷ்மீர் உள்ளிட்ட பல பிரச்சினைகளில் துருக்கி பாகிஸ்தானுக்கு (Pakistan) ஆதரவளித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


துருக்கி, தனது உற்ற நண்பனான பாகிஸ்தானுக்கு உதவும் நோக்கில், இந்தியாவில் அமைதியின்மையை ஏற்படுத்ததும், நிலைமையை சீர் குலைக்கவும் தொடர்ந்து சதி திட்டம் தீட்டி வருகிறது. 


ALSO READ | அழுத பிள்ளை பால் குடிக்கும்.. ஆனால் இங்கே அழவில்லை என்றால் உயிர் போகும்..!


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR