IAF வீரர் அபிநந்தனுக்காக தமிழக கோவில்களில் சிறப்பு வழிபாடு.....
இந்திய விமானப்பை வீரர் அபிநந்தனுக்காக தமிழகம் முழுவதும் உள்ள கோயில்களில் சிறப்பு வழிபாடு!!
இந்திய விமானப்பை வீரர் அபிநந்தனுக்காக தமிழகம் முழுவதும் உள்ள கோயில்களில் சிறப்பு வழிபாடு!!
பாகிஸ்தான் தீவிரவாத முகாம்கள் மீது இந்தியா நடத்திய துல்லிய தாக்குதலைத் தொடர்ந்து, தற்போது இந்தியா -பாகிஸ்தான் இடையே போர் பதற்ற சூழ்நிலை உருவாகியுள்ளது. நேற்று எல்லையில் நுழைய பாகிஸ்தான் போர் விமானங்கள் முயற்சித்தன. அதில் பாகிஸ்தானின் எப்-16 ரக போர் விமானத்தை இந்தியா சுட்டு வீழ்த்தியது.
இந்த சூழலில், இந்திய விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தன் நேற்று பாகிஸ்தானின் பிடியில் சிக்கிக்கொண்டார். அவரை மீட்கும் முயற்சியில் இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அபிநந்தன் பாதுகாப்பாக இருப்பதாக பாகிஸ்தான் நேற்று வீடியோ வெளியிட்டது. அபிநந்தனை பாதுகாப்பாக விடுவிக்க வேண்டும் என்று உலக நாடுகளும் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில், பாகிஸ்தான் விமானப் படை விமானங்களை விரட்டி சென்ற போது, எதிர்பாராதவிதமாக அந்நாட்டு ராணுவத்திடம் சிக்கிய, நம் விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தன், இன்று மதியம், நம் நாட்டிடம் ஒப்படைக்கப்பட உள்ளார்.
அவர் விரைவில் விடுதலை ஆக வேண்டும் என வேண்டி, நேற்று முன்தினம் முதலே, நாட்டின் பல பகுதிகளிலும் சிறப்பு வழிபாடுகள், பிரார்த்தனைகள் செய்யப்பட்டு வந்தன. இதை தொடர்ந்து அவரை விடுவிப்பதாக பாகிஸ்தான் அரசு அறிவித்ததை அடுத்து, கடவுளுக்கு நன்றி செலுத்தும் வகையில், சென்னையில் உள்ள முக்கிய கோவில்களில் பொதுமக்கள் சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனர்.
சென்னை பிராட்வேயில் உள்ள பிரசித்தி பெற்ற காளிகாம்பாள் கோவிலில், ஊர்காவல்படையினர், பொதுமக்கள் சார்பில், அபிநந்தன் விடுதலைக்கு நன்றி தெரிவித்து, சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில், ஏராளான ஊர்க்காவல் படையினர், பொதுமக்கள் பங்கேற்றனர்.