பார்மேர்: கொரோனா வைரஸ் தொற்றுநோயால் நாடு முழுவதும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் கடந்த 5 மாதங்களாக மூடப்பட்டுள்ளன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பல பள்ளிகளில் ஆன்லைன் முறையில் பாடங்கள் (Online Classes) நடத்தப்பட்டு வருகின்றன. சில இடங்களில் ஆன்லைன் வழிக் கல்வி இன்னும் ஒரு முயற்சியாகவே உள்ளது. ஆனால் சில இடங்களில் மொபைல் ஃபோன்களின் தட்டுப்பாடும், மின்சாரம் மற்றும் சிக்னல் பிரச்சினைகளும் மாணவர்களுக்கு பிரச்சினையாக உள்ளன.


ராஜஸ்தானின் எல்லையில் உள்ள பார்மேர் மாவட்டமும் (Barmer) இந்த  பிரச்சினைக்கு விதிவிலக்கல்ல. இங்குள்ள தொலைதூர கிராமப்புறங்களில் மொபைல் நெட்வொர்குகள் (Mobile Network) அவ்வப்போது இல்லாமலும் துண்டித்தும் போவது மாணவர்களுக்கு பெரும் பிரச்சினையாக உள்ளது.


ஆனால் ஏழாம் வகுப்பில் படிக்கும் ஹரீஷ் என்ற மாணவன் இந்த பிரச்சினைக்கான தீர்வைக் கண்டு விட்டார். அவர் ஒவ்வொரு நாளும் தனது நாற்காலி மேசையையும் புத்தகங்களையும் எடுத்துக்கொண்டு 2 கி.மீ தூரத்தில் உள்ள மலைக்குச் செல்கிறார். அங்கு சென்றபின் அவரது மொபைலுக்கு சிக்னல் கிடைக்கிறது. அதன் பிறகு அவர் அங்கு அமர்ந்து 3 மணி நேரம் படிக்கிறார். ஹரீஷிற்கு படிப்பின் மீது இருக்கும் ஆர்வம் சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்தர் சேவாக் ட்வீட் மூலம் ஹரிஷுக்கு உதவ விருப்பம் தெரிவித்துள்ளார்.



ALSO READ: இப்படியும் சில மனிதர்கள்: பறவைக்காக இருளைத் தழுவிக் கொண்ட அற்புத கிராமம்!!


பாட்மேர் மாவட்ட தலைமையகத்திலிருந்து 20 கி.மீ தூரத்தில் உள்ள தருடா கிராமத்தில் வசிக்கும் ஹரீஷ் குமார், பச்பத்ராவின் ஜவஹர் நவோதயா வித்யாலயாவில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார். Covid -19 காரணமாக, அவரது பள்ளியும் கடந்த 5 மாதங்களாக மூடப்பட்டுள்ளது.


ஒன்றரை மாதங்களுக்கு முன்பு அவரது பள்ளியால் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்பட்டன. ஹரீஷின் கூற்றுப்படி, இந்த வகுப்பு தொடங்கிய பிறகு, அவர் இணையத்தை இயக்கியபோது, ​​அவரால் இணைப்பைப் பெற முடியவில்லை. அதன் பிறகு, சிக்னலைத் தேடி அவர் செல்லத் தொடங்கினார். 2 கி.மீ தூரத்தில் உள்ள மலையில்தான் அவருக்கு சிக்னல் கிடைத்தது.


அவர் அங்கு சென்றவுடன், அவரது மொபைல் தொலைபேசியில் அவருக்கு சிக்னல் கிடைத்து இணைப்பு கிடத்தது. இதற்குப் பிறகு ஹரீஷ் இனி தினமும் காலையில் எழுந்து இங்கு வந்து ஆன்லைன் வகுப்பில் சேர்ந்து படிப்பது என முடிவு செய்தார்.


அப்போதிருந்து, ஹரீஷ் அதிகாலையில் எழுந்து தனது மேஜை நாற்காலியுடன் மலைக்குச் சென்று வெப்பம் மற்றும் குளிருக்கு இடையே ஆன்லைன் வகுப்பில் படிக்கிறார். ஹரீஷின் கூற்றுப்படி, அவர் தினமும் காலை 8:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை மலையில் படிக்கிறார்.


இது ஹரீஷ் பற்றிய பிரச்சனை மட்டுமல்ல என்று ஹரீஷின் தந்தை வீரம்தேவ் கூறுகிறார். இங்கு மொபைல் நெட்வொர்க் இல்லாததால், ஆயிரக்கணக்கான குழந்தைகள் ஆன்லைன் மூலம் கல்வி கற்க முடியவில்லை. இந்த பகுதியில் மொபைல் இணைப்பை அதிகரிக்க அரசாங்கம் உடனடியாக ஏற்பாடு செய்ய வேண்டும். இதன் மூலம் இங்கு வாழும் ஆயிரக்கணக்கான மானவர்கள் ஆன்லைன் மூலம் எளிதாக எந்த பிரச்சனையும் இல்லாமல் கல்வி கற்க முடியும் என்று அவர் நம்புகிறார்.