நாட்டில்  உள்ள பெருபான்மையான மக்களுக்கு கொரோனா வைரஸிலிருந்து மீண்ட பிறகு, தடுப்பூசி போட்டுக் கொள்ளலாமா இல்லையா, அப்படி போடலாம் என்றால் எப்போது போட்டுக் கொள்ள வேண்டும், என்ன செய்ய வேண்டும் என  குழப்பம் நிலவுகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில், கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களுக்கு தடுப்பூசியின் ஒரு டோஸ் போதுமானது என்றும், அவர்கள் 2 டோஸ் தடுப்பூசிகொடுக்கப்பட்டவர்களை விட அதிக பாதுகாப்பாக இருக்கிறார்கள். இந்த ஆய்வு தொற்று நோய் தொட்ரபான ஒரு இதழில் (Infectious Disease Journal) வெளியிடப்பட்டுள்ளது.


ஹைதராபாத்தின் ஏ.ஐ.ஜி மருத்துவமனையில் நடத்தப்பட்ட ஆய்வின் அடிப்படையில், COVID-19 தொற்றிலிருந்து மீண்ட மக்களுக்கு, ஒரு டோஸ் தடுப்பூசியே நிறைய பாதுகாப்பை அளிக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இந்த மருத்துவமனை 260 சுகாதாரப் பணியாளர்கள் மீது ஆய்வு செய்துள்ளது. அவர்கள் அனைவருக்கும் ஜனவரி 16 முதல் பிப்ரவரி 5 வரை கோவிஷீல்ட் தடுப்பூசியின் முதல் டோஸ் போடப்பட்டிருந்தது. ஒரு நோய் இருக்கும்போது, உடலில் நினைவக செல்கள் எந்த அளவிற்கு நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்க முடியும் என்பதை ஆய்வு செய்தது.


தடுப்பூசி போட்டு கொண்டதற்கு முன்பு COVID-19 நோயால் பாதிக்கப்பட்டவர்களிடம், நடத்திய ஆய்வில், அவர்களுக்கு, ஒரு டோஸ் தடுப்பூசி (Corona Vaccine) கொடுக்கப்பட்டதிலேயே, நிறைய ஆன்டிபாடிகள் உடலில்  உற்பத்தி செய்யப்பட்டன என்று ஆய்வு முடிவுகள் வெளிப்படுத்தின. அதேசமயம் தொற்று ஏற்படாதவர்களில், ஆன்டிபாடிகள் குறைவாகவே இருந்தன. 


ALSO READ | COVID-19: குழந்தைகளைப் பாதுகாக்க ஆயுஷ் அமைச்சகம் வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்கள்

எளிய மொழியில்,  கூறுவதென்றால், கொரோனா வைரஸால் (Coronavirus) பாதிக்கப்படுகையில், உடல் அதை எதிர்த்துப் போராடுவதற்கு நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குகிறது, அதாவது ஆன்டிபாடிகளை உருவாக்குகிறது. ஆன்டிபாடிகளை உருவாக்கும் இந்த செயல்முறை நபரின் நினைவக செல்களில் பதிவு செய்யப்படுகிறது. அத்தகைய சூழ்நிலையில், மீண்டும் தொற்று ஏற்பட்டால், இந்த நினைவக செல்கள் மீண்டும் செயல்படுகின்றன மற்றும் ஆன்டிபாடிகளை விரைவாக உருவாக்க முடிகிறது.


கொரோனா வைரஸ் தடுப்பூசி போடப்பட்ட பின்னரும் நினைவக செல்கள் அதே போன்று செயல்படுத்தப்படுகின்றன. இந்த அடிப்படையில், தொற்று ஏற்பட்ட 3 முதல் 6 மாதங்களுக்குள் ஒரு டோஸ் எடுத்துக் கொண்டாலும், அது 2 டோஸுக்கு சமமான பாதுகாப்பைக் கொடுக்கும் திறன் கொண்டது என்று முடிவு செய்யப்பட்டது.


ஏ.ஐ.ஜி மருத்துவமனைகளின் தலைவர் டாக்டர் நாகேஷ்வர் ரெட்டி கூறுகையில், தடுப்பூசி பற்றாக்குறையும் இதனால் தீரும் என்றார். மேலும், ஒரு நபருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால், அதிலிருந்து உண்டாகும் ஆன்டிபாடிகள் எந்த தடுப்பூசியையும் விட வலிமையானவை என்றும் எய்ம்ஸ் மருத்துவமனையின் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த ஆராய்ச்சிக்குப் பிறகு, கொரோனா வைரஸ் தொற்று உள்ள நபருக்கு தடுப்பூசியின் நெறிமுறை மாற்றப்பட வேண்டுமா என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும் என கூறப்படுகிறது.


Also Read | கொரோனா தொற்றால் மனதளவில் அதிக பாதிப்பு 'இந்த' வயதினருக்கு தான்: ஆய்வு


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR