MBA படிக்க சிறந்த இடம் பெங்களூரு தான் என ஒரு ஆய்வின் முடிவு தெரிவித்துள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

'MBA Trends and Analysis, 2018' என பெயரிடப்பட்டள்ள இந்த ஆய்வானது, MBA படிக்க சிறந்த இடம் பெங்களூரு தான் எனவும். பெண்களை காட்டிலும் ஆண்களே பெங்களூருவில் அதிகளவில் MBA படிக்கின்றனர், அதிலும் பெரும்பான்மை உத்திரபிரதேச மாணவர்கள் என தெரிவித்துள்ளது.


சுமார் 5 லட்சம் மாதிரிகளை கொண்டு ஆராயப்பட்ட இந்த கணக்கெடுப்பானது கல்லூரி, உயர் நிலை பள்ளிகள், இணையதளம் வாயிலாக நடத்தப்பட்டது. இந்த ஆய்வின் முடிவில் வெளிவந்துள்ள முடிவு இவ்வாறு தெரிவித்துள்ளது.


பெங்களூருவை அடுத்து MBA பயில சிறந்த இடமாக புனே, மும்பை, சென்னை, டெல்லி என பட்டியலிடப்பட்டுள்ளது. மேலும் இங்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் உத்திர பிரதேசம், மத்திய பிரதேசம் மற்றும் ஆந்திர பிரதேசம் என வரிசைப் படுத்தப்பட்டுள்ளது.


ஒட்டுமொத்த மாணவரகளின் பட்டியலில் ஆண்களே அதிக அளவில் MBA பயில்கின்றனர் எனவும் இந்த ஆய்வு தெரிவித்துள்ளது.


இதுகுறித்தும CollegeSearch நிறுவனர் அனிரூத் மோத்வானி தெரிவிக்கையில், மாணவர்களின் மனதளலை பொருத்தவரையில் பயிலும் இடத்தில் வேறுபாடுகள் இருப்பதில்லை, அதேப்போல் இடத்தை பொறுத்து பாடங்கள் மாறுபடும் என்பதிலும் அவர்கள் உறுதிகொள்வதில்லை, எனவே தான் இத்தகு மாற்றம் ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.