பாகிஸ்தானின் (Pakistan) பஞ்சாப் (Punjab)  மாகாணத்தில், போனில் வீடியோ கால் அழைப்பில், அந்த 86 வயது பெண்மணியின் கண்களில் கண்ணீர் துளிர்த்தது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

70 ஆண்டுகளுக்கு பிறகு, பிரிவினையில் தொலைந்தவர் WhatsApp மூலம் இணைந்த அதிசய சம்பவம் அனைவர் மனதையும் நெகிழ வைத்துள்ளது.


பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில், போனில் ஒரு வீடியோ அழைப்பு ஒன்றில் தனது உறவினர்களை பார்த்த அவர் தனது கண்ணீரை கட்டுப்படுத்த முடியாமல், உணர்ச்சி வசப்பட்டு மொபைல் ஸ்க்ரீனில், முத்தமிட தொடங்கியாது அனைவரையும் நெகிழச்செய்தது. 


நான் எனது வாழ்க்கையை இது வரை கண்ணீருடன் கழித்தேன் என அவர் கூறியுள்ளார்.


2019 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம், பாகிஸ்தானை சேர்ந்த யூடியூபர் ( YouTuber)  முஹம்மது ஆலம்கீர்,  டாபியா என்ற அந்த பெண்மணியில்  வீடியோவைப் பகிர்ந்து கொண்டு, ​​1947 ஆம் ஆண்டில் பிரிவினையின் போது, டாபியாவின் குடும்பம் இந்தியாவுக்கு சென்றபோது, 13 வயதுடைய டாபியா கடத்தப்பட்டதால், பாகிஸ்தானிலேயே தங்க நேரிட்டது என்றும் இந்தியாவின் உள்ள அவரது ப் குடும்பத்தைப் பற்றி யாருக்கும் தெரியுமா என்றும் கேட்டிருந்தார்.


ALSO READ | பல்லை சுத்தம் பண்ணினா போதாது, வயிற்றையும் சுத்தம் பண்ணனும்னு நினைச்சிருப்பாரோ..!!!!


பிரிவினையின் போது கடத்தப்பட்ட டாபியா,  இஸ்லாமிற்கு மதம் மாற்றப்பட்டு, கட்டாய திருமணம் செய்து வைக்கப்பட்டார். அவருக்கு ஏழு குழந்தைகள் உள்ளன.


பாகிஸ்தானில் உள்ள டாபியாவின் பேரனான, 40 வயது நசீர் கான், தனது பாட்டிக்கு, அவரது உடன் பிறந்தவர்கள் அனைவரையும் நினைவில் உள்ளது என்றும், அந்த சந்தோஷமான நினைவுகளை தன்னுடன் தினமும் பகிர்ந்து கொள்வார் எனவும் குறிப்பிட்டார்.


டாபியாவின் பேரன், தனது பாட்டியின் உடன் பிறந்தவர்களின் பெயர் உள்ளவர்கள், முக நூல் கணக்குகளில் அவர் தனது பாடி குறித்த வீடியோக்களையும் , தகவல்களையும் பகிர்ந்து வந்தார்.  


ALSO READ | உலகக்கோப்பை வாங்கித் தந்த தல தோனியின் "Sixer ball" இப்ப எங்கே இருக்கு தெரியுமா..!!


தில்லியை சேர்ந்த சாயித் முகம்மது கான் என்பவர், டாபியா கூறிய விஷயங்களை வைத்து குடும்பத்தினரை தேடும் பணியில் இறங்கினார்.


அவர் எடுத்த முயற்சி திருவினையாகி, அவரது குடும்பத்தினர் கண்டு பிடிக்கப்பட்டு, 20 பேர் கொண்ட அந்த குடும்பம், 70 ஆண்டுகளுக்கு பிறகு வாட்ஸ் அப் வீடியோ அழைப்பில் இணைந்தனர். 


அவர்களால் கண்ணீரை கட்டுப்படுத்தவே முடியவில்லை. அவரால் இந்த வயதிலும் ஒவ்வொருவரையும் அடையாளம் காண முடிந்தது. அவர் விடியோ அழைப்பில் தொலைபேசியை  கண்ணீருடன் முத்தமிட்ட காட்சி அனைவரையும் நெகிழ வைத்தது.


இப்போதும் டாபியாவிற்கு இருக்கும் ஒரே ஆசை, இந்தியாவிற்கு விசா எடுத்து சென்று, தனது குடும்பத்தினரை சந்திக்க வேண்டும் என்பது தான்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR