பஞ்சாப் அமைச்சர் சித்து மீது காலணி வீசிய பெண் கைது

அரியானா மாநிலத்தில் பஞ்சாப் அமைச்சர் சித்து பொதுக்கூட்டத்தில் பேசியபோது, அவர் மீது காலணியை வீசிய பெண் கைது.
அரியானா மாநிலத்தில் பஞ்சாப் அமைச்சர் சித்து பொதுக்கூட்டத்தில் பேசியபோது, அவர் மீது காலணியை வீசிய பெண் கைது.
அரியானா மாநிலம் ரோத்தக் பாராளுமன்றத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரான தீபேந்தர் ஹூடாவை ஆதரித்து பஞ்சாப் மாநில அமைச்சர் நஜ்ஜோத் சிங் சித்து பிரசாரம் செய்தார்.
அப்போது, அங்கு திரண்டிருந்த ஒரு கும்பல், மோடிக்கு ஆதரவாக கோஷம் எழுப்பினர். சிறிது நேரத்தில் அந்த கூட்டத்தில் இருந்த ஒரு பெண், திடீரென சித்துவை நோக்கி செருப்பை வீசினார். செருப்பை வீசிய பெண்ணை போலீசார் கைது செய்தனர்.