ஆதார் தொடர்பான பல்வேறு வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. ஆதார் தகவல்கள் ரூ.500-க்கு கிடைக்கிறது என்பது உள்ளிட்ட பல்வேறு புகார்களும் எழுந்த வண்ணம் உள்ளது.ஆதார் எண் பாதுகாப்பானது என்று தொடர்ந்து மத்திய அரசு தொடர்ந்து கூறி வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தற்போது எல்லாவற்றிற்கும் ஆதார் எண் தான் முக்கியமாக இருக்கிறது. ஆதார் என்னை வைத்தே ஒரு மனிதனின் எல்லா தகவல்களையும் பெற முடியும் என்பதால் ஆதார் எண் மிக அவசியமாக விளங்குகிறது.


பல்வேறு அரசு நிறுவனங்கள் சரிபார்ப்பு செயல்முறைக்காக ஆதார் எண் இணைக்க நடவடிக்கையை எடுத்துள்ளன, சமீபத்தில் பாஸ்போர்ட் வழங்கும் திட்டமும் அறிமுகபடுத்தியுள்ளனர்.


இந்நிலையில், முதல்கட்டமாக ரூ. 50 கோடி செலவில் 40 மில்லியன் பசுக்களுக்கு ஆதார் போன்ற அடையாள அட்டை வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.


இந்தியாவில் பெரும்பாலும் பாரதீய ஜனதா ஆட்சி செய்யும் மாநிலங்களில் பசு பாதுகாப்பு என்ற பெயரில் வன்முறைகளும், அதனால் உயிரிழப்புகளும் உத்தரபிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் நடந்தது வருகிறது.


இவ்விவகாரம் தொடர்பாக சமீபத்தில் சுப்ரீம் கோர்ட்டில் நடந்த விசாரணையில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து ராஜஸ்தான், அரியானா மற்றும் உத்தரபிரதேச மாநில அரசுக்குக்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.


குடிமக்களுக்கு ஆதார் அடையாள அட்டை நலதிட்டங்களுக்கு கட்டாயமாக்கப்பட்டது தொடர்பான வழக்குகள் மீதான விசாரணை சென்று கொண்டிருந்த போதே பசுக்களுக்கும் இதுபோன்ற அடையாள அட்டை வழங்க பா.ஜனதா அரசுக்கள் தரப்பில் முடிவு எடுக்கப்பட்டது தெரியவந்துள்ளது.