புதுடெல்லி: அனைத்து ரொக்கமில்லா பரிவர்த்தனைகளையும் ஆதார் அட்டை மூலம் மேற்கொள்ள வசதியாக செயலி ஒன்றை மத்திய அரசு உருவாக்கி உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இன்று முதல் செயல்பாட்டுக்கு வர உள்ள இந்த செயலி மூலம் ஆதார் அட்டைகளை பயன்படுத்தி ரொக்கமில்லா விற்பனைகளை வியாபாரிகள் நடத்தலாம். இதற்கு தேவை ஒரு ஆன்ட்ராய்டு செல்போன் மட்டுமே, இதில் பயோமேட்ரிக் ரீடர் ஒன்றை பொறுத்திக்கொண்டு ஆதார் செயலியை பதிவிறக்கம் செய்துக்கொள்ளவேண்டும்.   


பயோமேட்ரிக் ரீடர் தற்போது இரண்டாயிரம் விலையில் கிடைக்கிறது. செயலியில் வாடிக்கையாளர்களின் ஆதார் எண்ணை குறிப்பிட்டு அவரது ரேகை பதிவு போன்ற பயோமேட்ரிக் பதிவுகளை பயன்படுத்தி பொருட்களை விற்கலாம். அதற்கான தொகை வாடிக்கையாளரின் வங்கி கணக்கிலிருந்து விற்பனையாளருக்கு சென்றுவிடும். இந்த ஆதார் செயலி மூலம் தற்போது மார்க்கெட்டில் உள்ள விசா, மாஸ்டர் அட்டைகளையும் தவிர்க்க முடியும். 


இந்த அட்டைகள் மூலம் நடக்கும் பரிவர்த்தனையை அந்த சேவையை வழங்கும் நிறுவனங்கள் தற்போது கட்டணம் வசூலித்து வருகிறது. 


மேலும் இந்த முறையை செயல்படுத்துவதால் அனைத்து வங்கி கணக்குகளையும் மார்ச் 31-ம் தேதிக்குள் ஆதாருடன் இணைக்க முடியும் என அரசு கருதுகிறது.